ஈஸியான ஸ்வீட் ரெசிபி | Simple Sweet Recipes at Home in Tamil
Simple Sweet Recipes at Home in Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் எளிமையான ஸ்வீட் ரெசிபியை பார்க்கலாம். சிலருக்கு கார வகையை விட இனிப்பு வகை பிடிக்கும். அதிலும் கேக் என்று சொன்னால் போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கேக் செய்வதற்கு உங்களுக்கு அதிக பொருட்கள் எல்லாம் தேவைப்படாது. பால் மட்டும் போதும் சுவையான டேஸ்டில் கேக் செய்து விடலாம். சரி வாங்க இந்த பால் கேக் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பால் – ஒன்றரை லிட்டர்
- வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை – 150 கிராம்
- ஏலக்காய் தூள் – கால் டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஸ்டேப்: 1
- Easy Sweet Recipes in Tamil: ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் அளவிற்கு பால் எடுத்து கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது பாலை கிண்டி விடவும். பால் 1 லிட்டர் ஆகும் வரை கொதிக்க வேண்டும்.
ஸ்டேப்: 2
- Healthy Sweet Recipes in Tamil: ஒரு லிட்டர் அளவிற்கு பால் வந்தவுடன் அதில் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கிண்டிவிடவும். இப்போது பால் திரிந்து இருக்கும்.
- பின் அதில் 150 கிராம் சர்க்கரை சேர்த்து கிளறிவிடவும். பாலில் உள்ள தண்ணீர் வற்றும் வரை கொதிக்க வைத்து கிளறி கொண்டே இருக்கவும்.
ஸ்டேப்: 3
- Easy Sweet Recipes in Tamil: தண்ணீர் வற்றிய பின்பு கால் டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். இப்பொழுது இதனை கேக் டிரேயில் மாற்றி சமப்படுத்தி கொள்ளவும். 2 மணி நேரம் அதை அப்படியே விட்டு விடவும்.
- இரண்டு மணி நேரம் கழித்து இந்த கேக்-ஐ வெட்டி உங்கள் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
அரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி? |
பேக்கரி ஸ்டைல் ஹனி கேக் செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |