Egg Chukka Recipe in Tamil..!
சிலர் நான்வேஜை விரும்ப மாட்டார்கள். ஆனால் முட்டையை மட்டும் அவர்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்வார்கள். அதே மாதிரி சிலர் நான்வெஜ் என்று சொன்னால் போது சும்மா வெளுத்து கட்டுவாங்க. சிலர் என்ன உன்னவாக இருந்தாலும் சரி அளவோடுதான் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த முட்டை சுக்காவை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து கொடுத்தால் போதும் அடுத்த நொடியே நீங்கள் செய்த முட்டை சுக்கா காலியாகிவிடும். அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும். சரி வாங்க மிக எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முட்டை சுக்கா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- முட்டை – 8
- பெரிய வெங்காயம் – 3
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
- சோம்பு – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- மிளகாய் தூள் – 3/4 ஸ்பூன்
- மல்லி தூள் – ஒரு ஸ்பூன்
- மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
- சோம்பு தூள் – சிறிதளவு
- கடுகு – 1/4 ஸ்பூன்
- கருவேப்பில்லை – தேவையான அளவு
- கொத்தமல்லி இலை – தேவையான அளவு
- தேங்காய் பால் – 1/2 கப்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு வைப்பது எப்படி?
முட்டை சுக்கா செய்முறை – Egg Chukka Recipe in Tamil:
முட்டை சுக்கா செய்வதற்கு முதலில் முட்டைகளை அவித்து ரெடியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். பின்பு மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சரி வாங்க முட்டை சுக்கா செய்ய ஆரம்பிப்போம்.
அடுப்பில் ஒரு அடி கனமான கடாயை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அவற்றில் இரண்டு டெபோல் ஸ்பூன் சமையல் எண்ணெயை ஊற்றவும்.
எண்ணெய் நன்கு சூடேறியதும் 1/4 ஸ்பூன் கடுகை சேர்க்கவும். கடுகு நன்கு பொரிந்ததும் சோம்பு சேர்க்கவும். பெருஞ்சிரகமும் நன்கு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள மூன்று பெரிய வெங்காயத்தை மற்றும் சிறிதளவு கருவேப்பில்லை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு பொன்னிறம் ஆகும் வரை வதக்கிவிடுங்கள். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறிவிடுங்கள். தண்ணீர் கொஞ்சம் வற்றியதும் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும்.
ஆகவே ஓரளவு தண்ணீர் வற்றிவிட்டது என்றால் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிவிடுங்கள்.
மசாலா பொருட்களை சேர்த்து வதக்கிய பின் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி திரும்பவும் கிளறி விடுங்கள்.
பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து கிளறிவிடுங்கள். ஓரளவு எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் தேங்காய் பாலினை சேர்க்க வேண்டும்.
தேங்காய் பாலினை சேர்த்த பிறகு 5 நிடங்கள் கலவையை கொதிக்கவிடுங்கள். 5 நிமிடம் கழித்த பின் அவித்த முட்டைகளை நடுவில் கீறிவிட்டு சேர்த்து 2 நிமிடம் கிளறிவிடுங்கள்.
பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி விடுங்கள். பிறகு மிளகு தூள், சோம்பு தூள் மற்றும் கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்கவும். இவை அனைத்தையும் சேர்த்த பின் நன்றாக கிளறிவிடுங்கள். அதாவது மசாலாவில் உள்ள நீர் ஓரளவு வற்றும் வரை கிளறிவிடுங்கள். அவ்வளவு தான் சுவையான மற்றும் அருமையான முட்டை சுக்கா தயார், ஒருமுறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |