ஸ்நாக்ஸ் ரெசிபி | Evening Snacks Recipes in Tamil
பொதுவாக அனைவருக்கும் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதற்காக கடையில் உள்ள ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடுவோம். இனி கடையில் வாங்காமல் வீட்டிலே ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே குழந்தைகளுக்கு ஹெல்தியான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஓகே வாருங்கள் ஈசியாக சுவையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்பதை இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl
ஸ்னாக்ஸ் செய்வது எப்படி.?
ஸ்னாக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
- கடலை – 150 கிராம்
- அரிசி மாவு- 25 கிராம்
- கடலை மாவு- 50 கிராம்
- உப்பு- தேவையான அளவு
- மிளகாய் தூள்- காரத்திற்கேற்ப
- இஞ்சி பூண்டு விழுது- 1/2 ஸ்பூன்
Snacks Seimurai in Tamil:
ஸ்டேப்: 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலையை சேர்த்து அதனுடன், அரிசி மாவு, கல்ல மாவு சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
பிறகு, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை..! |
ஸ்டேப்: 3
இப்போது அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் பக்கோடா போடும் அளவிற்கு சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். இவை அனைத்தையும் நன்றாக கலந்து, ஒரு 5 நிமிடம் ஊறவைத்துவிடுங்கள்.
ஸ்டேப்: 4
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் பிசைந்து வைத்த மாவை கையால் எடுத்து எண்ணெயில் உதிர்த்து விட வேண்டும். இது நன்றாக சிவந்ததும் எண்ணெய் இல்லாமல் வடிகட்டி எடுத்தால் மொறுமொறுப்பான சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி..!
ஓரு கப் சேமியா இருந்தால் போதும் மிகவும் சுவையான ஸ்நாக்ஸ் செஞ்சி சாப்பிடலாம்..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |