கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் Fruit Jelly Cake | Fruit Jelly Cake Recipe in Tamil

Fruit Jelly Cake Recipe in Tamil

பழ ஜெல்லி கேக் | Jelly Cake Recipe in Tamil

கேக் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு என்றே சொல்லலாம். அதிலும் இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் அன்று அனைவரது வீட்டிலும் கேக் செய்து அதனை வெட்டி கொண்டாடுவார்கள். நாம் இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் அனைவருக்கும் பிடித்த பழ ஜெல்லி கேக் (Fruit Jelly Cake Recipe in Tamil) எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

 1. ஸ்ட்ராபெர்ரி – தேவையான அளவு (நறுக்கியது)
 2. மாம்பழம் – தேவையான அளவு (நறுக்கியது)
 3. கிவி – தேவையான அளவு (நறுக்கியது)
 4. ப்ளூபெர்ரி – தேவையான அளவு (நறுக்கியது)
 5. தேங்காய் பால் – 1 கப்
 6. சர்க்கரை – தேவையான அளவு
 7. அகர் அகர் பவுடர் – 1 பாக்கெட்
 8. Yellow Food Colouring liquid – தேவையான அளவு

செய்முறை:

இந்த கேக் செய்வதற்கு மொத்தம் மூன்று லேயர்கள் தயார் செய்ய வேண்டும்.

முதல் லேயர் – Jelly Cake Recipe in Tamil:

 • ஜெல்லி செய்வதற்கு முதலில் அகர் அகர் பவுடர் மற்றும் 1 கப் சர்க்கரையை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை மற்றும் அகர் அகர் பவுடர் தண்ணீரில் நன்றாக கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது ஜெல்லி தயாராகிவிடும்.
 • பின்பு ஒரு பாத்திரத்தில் இந்த ஜெல்லியை சிறிதளவு எடுத்து ஊற்றி கொள்ளவும், அதன் மேல் சிறியதாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம், கிவி, ப்ளூபெர்ரி பழங்களை வரிசையாக ஒரு லேயர் வரும் அளவிற்கு அடுக்கி கொள்ளவும் (பழ ஜெல்லி கேக் செய்வதற்கு உங்களிடம் இருக்கும் எந்த பழத்தை வேண்டுமனாலும் பயன்படுத்தி கொள்ளலாம்)
 • பழங்களை ஒரு லேயர் அடுக்கிய பின் ஜெல்லி கரைசலை பொறுமையாக ஊற்றவும். பின்பு மீதமுள்ள பழங்களையும் அடுக்கி கொள்ளவும். பழங்களை அடுக்கிய பின் மீதமுள்ள ஜெல்லி கரைசலை அதன் மேல் பொறுமையாக ஊற்றவும். ஊற்றிய பின்பு இந்த லேயர்களை சிறிது நேரம் ஆற விட வேண்டும், இது ஆறுவதற்குள் நாம் இரண்டாவது லேயர் செய்வதற்கான திரவத்தை தயார் செய்துவிடலாம்.

இரண்டாவது லேயர் – Fruit Jelly Cake Recipe in Tamil:

 • இந்த லேயர் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 250ml தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் அகர் அகர் பவுடர், சர்க்கரை தேவையான அளவு, 1 டேபிள் ஸ்பூன் Yellow Food Colouring liquid சேர்த்து கரையும் வரை கொதிக்க வைக்கவும். அகர் அகர் பவுடர், சர்க்கரை, Yellow Food Colouring நீரில் கரைத்து இரண்டாவது லேயர் செய்வதற்கான திரவம் கிடைத்துவிடும்.
 • முதல் லேயர் ஆறிய பின் இரண்டாவது லேயர் செய்வதற்கு தயார் செய்து வைத்த திரவத்தை அதன் மேல் பொறுமையாக ஊற்றவும். (கரண்டியை திருப்பி வைத்து ஊற்றவும்) பின்பு இதனை சிறிது நேரம் ஆற வைக்கவும். இது ஆறுவதற்குள் நாம் முன்றாவது லேயர் செய்வதற்கான திரவத்தை தயார் செய்து விடலாம்.

மூன்றாவது லேயர் – Fruit Jelly Cake Recipe in Tamil:

 • மூன்றாவது லேயர் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 250 ml தண்ணீர் 1 டேபிள் ஸ்பூன் அகர் அகர் பவுடர், சர்க்கரை தேவையான அளவு, 1 கப் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கிண்டவும். அகர் அகர் பவுடர், சர்க்கரை, தேங்காய் பால் கரைந்தவுடன் மூன்றாவது லேயரை பொறுமையாக ஊற்றவும். இதனையும் ஆற வைத்து கொள்ளவும்.
 • ஆறிய பின்னர் 1 மணி நேரம் Fridge-ல் வைக்கவும். ஒரு மணிநேரம் கழித்து கேக்கை கத்தியை பயன்படுத்தி அதன் ஓரத்தை வெட்டி கேக்கை வெளியே எடுக்கவும்.
 • இப்பொழுது சுவையான ருசியான fruit jelly cake தயார்.
ப்ரூட் கேக் செய்வது எப்படி
சுவையான சாக்லேட் கேக் செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil