பழ கேசரி செய்வது எப்படி?
அனைவருக்கும் அன்பான வணக்கம் யாருக்கெல்லாம் கேசரி பிடிக்குமோ அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். அதேபோல் எப்போது ஒரே மாதிரியாக கேசரி செய்து அலுத்துப்போயிருக்கும். இன்றைய பதிவில் பழ கேசரி செய்வது எப்படி என்பதை இன்று தெரிந்துகொள்ள போகிறோம். புது புது கேசரி கேரட் செய்திருப்பார்கள் அதே போல் பால் கேசரி செய்திருப்பீர்கள். இதையும் செய்து வரும் கிருஷ்ண ஜெயந்திக்கு கொண்டாடுங்கள்.
பழ கேசரி செய்ய தேவையான பொருட்கள்:
- ரவை – 1 கப்
- சர்க்கரை – 1 கப்
- பழத்துண்டுகள் – 1 1/2 கப்
- நெய் – விருப்பத்திற்கேற்ப
- முந்திரிப்பருப்பு – பிடித்தளவு
- உலர்ந்த திராட்சை – சிறிதளவு
- ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
- கேசரி பவுடர் – சிறிதளவு
பழ கேசரி செய்முறை விளக்கம்:
ஸ்டேப் -1
முதலில் பழங்களை கழுவி விட்டு சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி திராட்சை இரண்டையும் வறுத்துத்தெடுத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிது நெய் விட்டு பழ துண்டுகளை போட்டு 3 நிமிடம் வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
மறுமுறையில் நெய் விட்டு அதில் ரவையை போட்டு வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் -2
இப்போது ஒரு கனமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு வறுத்து எடுத்து வைத்த ரவையை அதில் சேர்த்து கலந்து விடவும்.
ரவையை சேர்த்தபிறகு சர்க்கரையை சேர்த்து கிளறிவிட வேண்டும்.
ஸ்டேப் -3
பின்பு அதில் கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும், பின்பு அதில் வறுத்தெடுத்துவைத்த பழ துண்டுகளை சிறிது நெய் சேர்த்து கிளறவும்.
ஸ்டேப் -4
பாத்திரத்தில் ஓட்டாமல் இருக்க நெய் சேர்த்து கடைசியாக நெய்யில் வறுத்து வைத்த முந்திரி திராட்சையை சேர்த்து சூடாக அனைவருக்கும் ருசிக்க கொடுங்கள் சுவை தாறுமாறாக இருக்கும்.
வீட்டில் சேமியா இருந்தால் இதையும் செய்து பாருங்கள் ⇒ சேமியா கேசரி செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |