வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

90’s கிட்ஸ் ஸ்பெஷல் தேன் மிட்டாய் செய்வது இவ்வளவு ஈஸியா..?

Updated On: September 30, 2023 8:49 AM
Follow Us:
Honey Candy Recipe in Tamil
---Advertisement---
Advertisement

Honey Candy Recipe in Tamil

தினமும் நமது பதிவின் மூலம் மிகவும் அருமையான மற்றும் மிகவும் ருசியான சமையல் குறிப்புகளை அறிந்து கொண்டுவருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் 90’s கிட்ஸ் ஸ்பெஷல் தேன் மிட்டாய் வீட்டிலேயே செய்வது எப்படி.? என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். உங்களுக்கும் தேன் மிட்டாய் பிடிக்கும் என்றால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள ரெசிபியை அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த தேன் மிட்டாயை வீட்டிலே செய்து சுவைத்து பாருங்கள். சரி வாங்க நண்பர்களே தேன் மிட்டாயை வீட்டிலே செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Easy Honey Candy Recipe in Tamil:

Easy Honey Candy Recipe in Tamil

90’s கிட்ஸ் ஸ்பெஷல் தேன் மிட்டாய் வீட்டிலேயே செய்வது எப்படி..? என்பதை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முன்னால் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. உளுந்து – 2 டேபிள் ஸ்பூன் 
  2. அரிசி – 1 டேபிள் ஸ்பூன்
  3. சர்க்கரை – 2 கப் 
  4. பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன் 
  5. ஃபுட் கலர் – 1/4 டீஸ்பூன் 
  6. எண்ணெய் – தேவையான அளவு 
  7. தண்ணீர் – 1 கப் 

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் உளுந்து மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அரிசி ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 90’s கிட்ஸ் ஸ்பெஷல் Mango Bar வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா

ஸ்டேப் – 2

பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு மாவாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1/4 டீஸ்பூன் ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு சிறிய ஸ்பூனை கொண்டு சிறிது சிறிதாக ஊற்றி பொறித்து எடுத்து வைத்து  கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 மிகவும் ருசியான நெல்லிக்காய் மிட்டாய் செய்வது எப்படி

ஸ்டேப் – 4

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீரை ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப் – 5

Soft honey candy recipe in tamil

அது நன்கு கொதித்தவுடன் அதனை அடுப்பில் இருந்து இறக்கி அதில் நாம் முன்னரே பொறித்து வைத்துள்ள மிட்டாய்களை சேர்த்து 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் அதன் மீது சிறிதளவு சர்க்கரையை தூவி கொள்ளுங்கள்.

இப்பொழுது நமது சுவையான 90’s கிட்ஸ் ஸ்பெஷல் தேன் மிட்டாய் தயாராகி விட்டது. வாங்க சுவைக்கலாம் நீங்களும் இந்த தேன் மிட்டாய் ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 வீட்டிலேயே கொய்யாக்காய் மிட்டாய் செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

palapalam kolukattai in tamil

இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷலானா பலாப்பழம் பூரணம் கொழுக்கட்டை செய்து பாருங்கள்

potato payasam recipe in tamil

விநாயகர் சதுர்த்திக்கு இப்படி ஒரு பாயசம் செய்து விடுங்கள்

மூக்கடைப்பு பிரச்சனையை தீர்க்கும் மிளகு சாதம்..!

Chicken Dum Biryani in Tamil

ஓண‌ம் ஸ்பெஷல்!!! சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்