Hotel Style Red Chutney For Idli Dosa in Tamil
நண்பர்களே வணக்கம்..! உங்களில் யாருக்கு வீட்டில் சாப்பாடு செய்து போர் அடித்து இருக்கும். ஆம் அனைவருமே கடையில் சாப்பிடுவதற்கு அவ்வளவு ஆர்வம் இருக்கும். ஏனென்றால் அங்கு கொடுக்கும் உணவுகளில் தனி ருசி இருக்கும். அப்படி என்ன தான் சேர்த்து சமைக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் அதன் சுவை வேற மாதிரி இருக்கும். அதனை பற்றிய ரகசியங்களை ஒவ்வொன்றாக நாம் Pothunalam.com பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..! இந்த பதிவின் வாயிலாக நாம் ஹோட்டல் ஸ்டைல் மிளகாய் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Hotel Style Red Chutney For Idli Dosa in Tamil:
முதலில் ஒரு கடாய் எடுத்துக்கொள்ளவும். அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றவும். அதன் பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு அது பொன்னிறம் மாறிய பின்பு அதில் இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 சேர்த்து வதக்கவும்.
அதன் கூடவே வரமிளகாய் சேர்த்துக்கொள்ளவும். அதன் கூடவே 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
இது நன்றாக வதங்கியதும் அதில் 1 பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் 3 பெரிய தக்காளி சேர்த்துக் கொள்ளவும். இது நன்றாக வதங்கியதும் அதை அப்படியே ஆறவைத்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துகொள்ளவும்.
இட்லி, தோசைக்கு இந்த சட்னி செய்து பாருங்க
காலையில் அவசரமாக வேலைக்கு செல்பவர்கள் ஈசியாக செய்ய சூப்பரான சட்னி ரெடி
தாளிப்பு:
முதலில் 4 ஸ்பூன் அளவு நல்ல எண்ணெய் கடாயில் ஊற்றவும். அதில் 1 டீஸ்பூன் அளவு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு சேர்த்து பொரிந்த பிறகு அதில் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றவும். அவ்வளவு தான் கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். அவ்வளவு தான் சட்னி ரெடி.
ஐயர் வீட்டில் செய்யும் அருமையான பூண்டு சட்னி இரண்டு இட்லி அதிகமாக உள்ள போகும்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |