இட்லி மாவில் சுவையான கேக் செய்யலாம் வாங்க..!

Advertisement

இட்லி மாவு கேக் செய்முறை! Idli Cake Recipe in Tamil..!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கில் பல வகையான கேக் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கேக் பிடிக்கும். வீட்டில் எளிமையான முறையில் கேக் செய்ய விரும்புபவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக. அதாவது இட்லி மாவை கொண்டு மிகவும் சுவையான கேக் செய்யும் முறையை பற்றி தான் இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க இட்லி மாவில் பயன்படுத்தி கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. இட்லி மாவு – 1 கப்
  2. சர்க்கரை – ¾ கப்
  3. ரவா – 2 டேபிள் ஸ்பூன்
  4. தேங்காய் துருவல் – ½ கப்
  5. நெய் – 1 டீஸ்பூன்
  6. ஏலக்காய் பவுடர் – ½ ஸ்பூன்
  7. சோடா – ¼ டீஸ்பூன்

இட்லி மாவு கேக் செய்முறை – Idli Cake Recipe in Tamil:idli batter cake

ஸ்டேப்: 1

ஒரு மூடியுள்ள சில்வர் பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது குக்கரை எடுத்துக்கொள்ளவும். இவற்றை அடுப்பில் வெறுமென 5 நிமிடம் சூடுபடுத்தவும்.

ஸ்டேப்: 2

ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, சர்க்கரை ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.

ஸ்டேப்: 3

பின் அதனுடன் ரவை, தேங்காய் துருவல், நெய் மற்றும் ஏலக்காய் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். பிறகு பேக்கிங் சோடா சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேக் வகைகள் செய்முறை

ஸ்டேப்: 4

இப்பொழுது ஒரு கடாயில் நெய் தடவி, அதன் மீது பட்டர் பேப்பரை விரித்துவிடவும். பிறகு இவற்றில் கலந்து வைத்துள்ள இட்லி மாவை ஊற்றவும்.

ஸ்டேப்: 5

ஏற்கனவே அடுப்பில் சூடாக்கி வைத்திருக்கும் பாத்திரத்தின் உள்ளெ இதை வைத்து. அந்த பாத்திரத்தையும் நன்றாக இடைவெளி இல்லாமல் நன்றாக மூடி வைக்கவும்.

ஸ்டேப்: 6

ஒரு 30 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இட்லி மாவு கேக்கை வேகவைக்கவும். அடிபிடிப்பதை தடுக்க 10 நிமிடங்களுக்கு ஒரு முறை அடுப்பில் வைத்திருக்கும் பாத்திரத்தை திறந்து பார்த்துக்கொள்ளவும். கொஞ்சம் கேக் வெந்தபிறகு. ஒரு ஈரமான குச்சியை அதன் மீது குத்திப் பார்க்கவும்.

ஸ்டேப்: 7

அந்த குச்சியில் இட்லி மாவு ஓட்டினால் மீண்டு சிறிது நேரம் வேவைக்கவும். குச்சில் மாவு ஒட்டாமல் வரும் வரை கேக்கை வேகவைத்தால் போதும் அதன் பிறகு அடுப்பை அனைத்து கேக்கை ஆறவைக்கவும். கேக் நன்றாக ஆறியதும் கேக்கை சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அடுப்பில் கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement