நீங்கள் எத்தனையோ போண்டா சாப்பிட்ருப்பீர்கள்..! ஆனால் இந்த மாதிரி போண்டா செய்து பாருங்கள்

Advertisement

போண்டா செய்வது எப்படி.?

நீங்கள் வெங்காய போண்டா, இனிப்பு போண்டா, உருளைக்கிழங்கு போண்டா, மைசூர் போண்டா, முட்டை போண்டா என பல வகைகள் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இந்த மாதிரி ஒரு போண்டா சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள். ஏனென்றால் இந்த போண்டா இட்லி மாவில் செய்ய போகிறோம். இட்லி மாவில் இட்லி, தோசை தான் செய்திருப்போம். இந்த மாதிரி போண்டா செய்திருக்க மாட்டோம். வாங்க இட்லி மாவில் போண்டா செய்வது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

போண்டா செய்ய தேவையான பொருட்கள்:

  1. இட்லி மாவு – 1 கப்
  2. அரிசி மாவு – 50 கிராம் 
  3. வெங்காயம் – 1
  4. பச்சை மிளகாய் – 2
  5. இஞ்சி – 1 பீஸ்
  6. கறிவேப்பிலை – சிறிதளவு
  7. கொத்தமல்லி – சிறிதளவு
  8. ஆயில் – 200 லிட்டர்
  9. மிளகு – 10

இதையும் செய்து பாருங்கள் ⇒வீட்டிலேயே தயிர் வடை செய்வது எப்படி?

போண்டா செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து கொள்ளுங்கள். அதில் இட்லி மாவு 1 கப், பச்சரிசி 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி போன்றவை சேர்த்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:2

அதனுடன் நுனிக்கிய மிளகு, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு போண்டா பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:3

பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து கொள்ளுங்கள். அதில் போண்டா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.

ஸ்டேப்:4

எண்ணெய் சூடானதும் கலந்து வைத்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போடுங்கள். உருண்டை நன்றாக வெந்த பிறகு சிவந்த நிறம் வந்தவுடன்  எடுத்து கொள்ளுங்கள். அவ்ளோ தாங்க இட்லி மாவு போண்டா ரெடி.! இதற்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இதையும் செய்து பாருங்கள் ⇒ மாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி ?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement