சூப்பரான சுவையில் ஐயர் வீட்டு தயிர் சாதம் செய்வது எப்படி..?

Advertisement

Iyer Veetu Thayir Sadam

பொதுவாக சாப்பாடு என்பது நாம் நம்முடைய பசிக்காக சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது. அத்தகைய சாப்பாட்டினை நாம் பசிக்காக மட்டும் சாப்பிடாமல் நம்முடைய நாக்கிற்கு எந்த சுவை தேவையோ அந்த சுவையில் செய்து சாப்பிடுவோம். சில நேரத்தில் நாம் என்ன தான் சுவையாக சமைத்தாலும் கூட நாம் எதிர்பார்த்த அந்த சுவை வராது. அதுவும் ஐயர் வீட்டு சாப்பாடு என்றால் அதில் ஒரு சுவை இருக்கும். அப்படிப்பட்ட ஐயர் வீட்டு சாப்பாடு என்றால் அதில் சாம்பார் சாதம், இட்லி பொடி, பூண்டு ஊறுகாய், தயிர் சாதம் மற்றும் வத்த குழம்பு போன்ற அனைத்தும் அதிகமாக பிடிக்கும். ஆகையால் இன்றைய பதிவில் சூப்பரான சுவையில் ஐயர் வீட்டு தயிர் சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவை படித்து கோடை காலத்திற்கு ஏற்றமாதிரியான ஐயர் வீட்டு தயிர் சாதம் செய்யலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl

ஐயர் வீட்டு தயிர் சாதம்:

ஐயர் வீட்டு தயிர் சாதம் எப்படி செய்வது என்றும் அதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தயிர் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

  • உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்
  • கடுகு- 1/2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள்- 1/2 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்- 2
  • பச்சை மிளகாய்- 1
  • இஞ்சி- சிறிய துண்டு 
  • மாங்காய்- சிறிய துண்டு 
  • கேரட்- 1/2 
  • பால்- 1/2 கப்
  • தயிர்- 2 கப்
  • மாதுளை பழம்- 2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை- சிறிதளவு 
  • கொத்தமல்லி- சிறிதளவு 
  • உப்பு- தேவையான அளவு 
  • எண்ணெய்- தேவையான அளவு 
  • சாதம்- 3 கப்

இதையும் படியுங்கள்⇒ ஐயர் வீட்டு சுவையான இட்லி பொடி செய்வது எப்படி தெரியுமா.. 

ஐயர் வீட்டு தயிர் சாதம் செய்வது எப்படி.?

ஸ்டேப்- 1

முதலில் எடுத்து வைத்துள்ள 1/2 கப் பாலினை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளுங்கள். அதுபோல 3 கப் அளவிற்கு சாதம் நன்றாக குழைவாக வேக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பின்பு எடுத்து வைத்துள்ள இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, மாங்காய், பச்சை மிளகாய், மாதுளை பழம் மற்றும் கேரட் இவை அனைத்தினையும் தண்ணீரில் சுத்தமாக அலசி கொண்டு சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் 3 கப் சாதம், 1/2 கப் பால் மற்றும் 2 கப் தயிர், தேவையான அளவு உப்பு இவை அனைத்தினையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ஒரு 2 நிமிடம் கழித்து பவுலில் இருக்கும் சாதத்துடன் நறுக்கி வைத்துள்ள மாங்காய், இஞ்சி  மற்றும் கேரட்டை சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் இவை அனைத்தினையும் சேர்த்து நன்றாக பொன் நிறமாக வரும் வரை கிண்டி விடுங்கள்.

ஸ்டேப்- 5 

அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடாயில் இருக்கும் பொருட்களை பவுலில் இருக்கும் சாதத்தில் சேர்த்து நன்றாக கிண்டி கொள்ளுங்கள்.

இப்போது அந்த சாதத்தின் மீது கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ஐயர் வீட்டு தயிர் சாதம் ரெடி.

ஐயர் வீட்டு தக்காளி குழம்பு செய்யலாம் வாங்க..

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement