கார பூண்டு சட்னி செய்முறை | Kara Chutney Tamil
Kara Chutney Recipe in Tamil – இட்லி தோசைக்கு என்ன தான் சாம்பார், குருமா, பொடி, சட்னி வகைகளை நிறைய தொட்டுக்கொண்டாலும், கார சட்னிக்கு ஈடு இணை வேறு எதுவும் இருக்காது. இட்லியாக இருந்தாலும் சரி, தோசையாக இருந்தாலும் சரி அதற்கு கார சட்னி தொட்டு கொண்டு சாப்பிட்டோம் என்றால் இரண்டு இட்லி கூடுதலாகவே சாப்பிட்டு விடுவோம். அவ்வளவு சூப்பராக இருக்கும். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருமே கார சட்னியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு இந்த கார சட்னி செய்ய தெரியாது என்றால் ஒரு கவலையும் வேண்டாம். இங்கு கார சட்னிக்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் அதற்கான செய்முறை விளக்கம் மிக தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதனை படித்து செய்முறை விளக்கத்தை தெரிந்துகொள்ளுங்கள்..
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் – 20
- பூண்டு – 20 பற்கள்
- புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
- வரமிளகாய் – 15
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – சிறிதளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு முறை வேர்க்கடலை சட்னி இப்படி ட்ரை செய்து பாருங்கள்..!
கார சட்னி செய்முறை விளக்கம் – Kara Chutney in Tamil Hotel Style:![](https://www.pothunalam.com/wp-content/uploads/2022/12/kara-chutney-recipe-in-tamil.jpg)
ஸ்டேப்: 1
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை வதக்கிக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
சின்ன வெங்காயம் ஓரளவு வதங்கியதும் அதில் பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 3
அதன் பிறகு சிறிதளவு புளியை அதனுடன் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
பிறகு வரமிளகாய் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். கூடவே அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த கடுகு சட்னி அரைச்சா இனி எந்த சட்னியும் அரைக்க மாட்டிங்க..!
ஸ்டேப்: 5
மிளகாய் வதங்கியதும் அடுப்பை Off செய்து நன்றாக ஆறவைக்கவும்.
ஸ்டேப்: 6
பொருட்கள் அனைத்தும் நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாருக்கு வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இருப்பினும் இந்த சட்னியை அம்மியில் அரைத்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.
அவ்வளவு தான் கார பூண்டு சட்னி தயார் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த சட்னியை தாளித்து கொள்ளலாம். இல்லையென்றால் அப்படியே இட்லி, தோசைக்கு சைடிஷாக வைத்து சாப்பிடலாம் எப்படி சாப்பிட்டாலும் சுவை சும்மா தெறிக்க விடும். ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |