இந்த பூண்டு சட்னியை செஞ்சி பாருங்கள் ஒரு வாரம் ஆனாலும் ஊசிபோகாது

Advertisement

பூண்டு சட்னி செய்வது எப்படி?

அனைவருக்கும் இனிமையான வணக்கங்கள் பொதுவாக நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் அனைத்து உணவு பொருட்களும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதில் மிகவும் முக்கியமான பொருள் பூண்டு. மருந்து பொருட்களில் ஒன்றான இந்த பூண்டை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு அதிகளவு நன்மையை அளிக்கின்றது. இந்த பதிவில் புது விதமான பூண்டு சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். உங்களுக்கு பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்..

👉👉 வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தேவையான பொருட்கள்:

  • நல்லெண்ணெய் = ஒரு குழி கரண்டி
  • வரமிளகாய் = 10
  • பூண்டு = 100 கிராம்
  • சிறிய அளவில் = புளி
  • தேவையான அளவு உப்பு

பூண்டு சட்னி செய்வது எப்படி?

உங்களுக்கு காரம் அதிகம் பிடிக்கும் என்றால் நீங்கள் பூண்டு, மிளகாயை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

ஸ்டேப் – 1

 kara garlic chutney in tamil

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். வதங்கிய பின் அதனை எண்ணெய்  இல்லாமல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 2

பூண்டு சட்னி செய்வது எப்படி

மீதி இருக்கும் எண்ணெய்யில் 100 கிராம் பூண்டு பல்லை போட்டு 3 நிமிடம் நன்றாக வருத்துத்துக்கொள்ளவும். பூண்சு வதங்குவதற்கான சரியான பக்குவம் பூண்டின் தோல் சுருங்கி வரும் அந்த அளவிற்கு வறுத்து எடுத்தால் போதும்.

ஸ்டேப் – 3

வறுத்து வைத்த பூண்டு மிளகாய் இரண்டையும் தனியாக மிக்சி ஜாரில் போட்டு அரைக்க எடுத்துக்கொள்ளவும்.

வருத்தவைத்த எண்ணெய்யில் இரண்டையும் சேர்த்து அதில் நெல்லிக்காய் அளவிற்கு புளி சேர்த்து அதன் கூடவே உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் அதிகம் தண்ணீர் சேர்க்காமல் வறுக்க எடுத்துக்கொண்ட நல்லெண்ணெயில் அதில் ஊறி வதக்கவும்.

ஸ்டேப் – 4

 பூண்டு சட்னி செய்வது எப்படி

அரைத்துவைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கிய பிறகு அதில் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு பெருக்காயம், கருவேப்பிலை போட்டு வாதக்கவு. இப்போது சூடாக இட்லி தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற உணவுகளுக்கு சேர்த்து சாப்பிடுங்கள் சுவை சூப்பராக இருக்கும். அதே போல் புதிய விதமான செட்டிநாடு பூண்டு குழம்பு பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

குறிப்பு கிராமத்து ஸ்டைலில் பூண்டு குழம்பு வைப்பது எப்படி 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement