100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..!

Advertisement

100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..! Original KFC சிக்கன் செய்வது எப்படி?

KFC Chicken Recipe At Home:-

KFC சிக்கன் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிகவும் விரும்பி சாப்பிடுவாரக்ள். இத்தகைய  KFC சிக்கனை வீட்டிலேயே மிகவும் எளிதில் சமைப்பது எப்படி என்று இப்போது நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

KFC Chicken Recipe – தேவையான பொருட்கள்:-

  1. லெக் பீஸ் – ஒரு கிலோ
  2. ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு
  3. சோள மாவு – 1/4 கப்
  4. கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
  5. மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
  6. மைதா மாவு – 3/4 கப்
  7. தேவையான அளவு – உப்பு
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
  9. மிளகு தூள் – ஒரு ஸ்பூன்
  10. முட்டை – ஒன்று
  11. சோயா சாஸ் – ஒரு ஸ்பூன்
  12. டொமேடோ சாஸ் – ஒரு ஸ்பூன்
  13. ஓட்ஸ் – ஒரு கப்
சுவையான சிக்கன் பரோட்டா செய்முறை..!

100% KFC சிக்கன் செய்யும் (KFC Chicken Recipe At Home) முறை தமிழில் விளக்கம்:

கேஎஃப்சி சிக்கன் செய்யும் முறை (KFC Chicken Recipe At Home) ஸ்டேப்: 1

இப்பொழுது ஒரு கிலோ லெக் பீசை சுத்தம் செய்து கீறிவிடவும். கீறிய பின்பு ஒரு சுத்தமான பாத்திரத்தில் இந்த லெக் பீஸை எடுத்து கொள்ளவும்.

பின்பு அவற்றில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து விடவும்.

பிறகு 1/4 கப் சோள மாவு மற்றும் 3/4 கப் மைதா மாவு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

KFC சிக்கன் செய்யும் முறை ஸ்டேப்: 2

பின்பு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள், ஒரு ஸ்பூன் சோயா சாஸ், ஒரு ஸ்பூன் டொமேடோ சாஸ், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.

Kfc-chicken-recipe-tamil

கலவையை நன்கு பிசைந்த பின்பு ஒரு மணி நேரம் வரை ப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 3

ஒரு மணி நேரம் கழித்த பின்பு லெக் பீஸை எடுத்து ஓட்ஸில் நன்றாக டிப் செய்து கொள்ளவும்.

ஸ்டேப்: 4

இதே போன்று அனைத்து லெக் பீசையும் ஓட்ஸில் டிப் செய்து எடுத்துக்கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அவற்றில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஓட்ஸில் டிப் செய்து வைத்துள்ள Chicken லெக் பீசை எண்ணெயில் போட்டு பொன்நிறமாக பொரித்து எடுக்கவும்.

அவ்வளவுதான் சுவையான KFC சிக்கன் தயார்… வீட்டில் சமைத்து ருசியுங்கள் நன்றி..!

சுவையான சமையல் சிக்கன் லாலிபாப் செய்முறை விளக்கம்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!
Advertisement