காய்கறி இல்லையா? அப்போ இந்த குழம்பு செய்ங்க குழம்பும் காலி..! சோறும் காலி..!
செட்டிநாடு மிளகு குழம்பு செய்வது எப்படி?
Kulambu Varieties in Tamil:- வணக்கம் இன்று நாம் செட்டிநாடு சுவையில் மிளகு குழம்பு எப்படி வைப்பது என்பதை பற்றி இங்கு நாம் படித்தறிவோம். இந்த செட்டிநாடு மிளகு குழம்பு 10 நாட்கள் வெளில வைத்தாலும் கெட்டு போகாது. நாம் எங்கயாவது ட்ராவல் செய்யும் போது இந்த மிளகு குழம்பை செய்து எடுத்து கொண்டு போகலாம். மிகவும் சுவையாக இருக்கும். சரி வாங்க காய்கறி இல்லாமல் இந்த செட்டிநாடு மிளகு குழம்பு எப்படி (chettinad milagu kulambu) செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம்.
தென்னிந்திய ஸ்பெஷல் மக்ரோனி செய்வது எப்படி? Macaroni Recipes In Tamil..! |
செட்டிநாடு மிளகு குழம்பு செய்வது எப்படி?
செட்டிநாடு மிளகு குழம்பு (chettinad milagu kulambu) செய்ய தேவையான பொருட்கள்:
- மல்லி விதை – ஒரு டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- உளுத்தப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் – இரண்டு
- சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
- புளி – ஒரு எலுமிச்சை அளவு (ஊறவைத்து கொள்ளவும்)
- நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1/4 டீஸ்பூன்
- உளுத்தப்பருப்பு – 1/4 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- சின்ன வெங்காயம் – 10 கட் செய்தது
- தக்காளி – 1
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- சாம்பார் பொடி அல்லது குழம்பு பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்
செட்டிநாடு மிளகு குழம்பு செய்முறை:
செட்டிநாடு மிளகு குழம்பு எப்படி செய்வது (chettinad kulambu varieties in tamil) ஸ்டேப்: 1
Kulambu Varieties in Tamil:- முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சில துளிகள் எண்ணெய் விட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும். பின் மல்லி விதை – ஒரு டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், உளுத்தப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – இரண்டு, சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் அளவிற்கு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
செட்டிநாடு மிளகு குழம்பு எப்படி செய்வது (chettinad kulambu varieties in tamil) ஸ்டேப்: 2
Kulambu Varieties in Tamil:- பின் அதே கடாயில் தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து வதக்கி எடுத்து கொள்ளவும். இந்த வதக்கிய தேங்காவினை, வறுத்த மசாலாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
செட்டிநாடு மிளகு குழம்பு எப்படி செய்வது (chettinad kulambu varieties in tamil) ஸ்டேப்: 3
Kulambu Varieties in Tamil:- பின் மிக்சி ஜாரில் ஒரு எலுமிச்சை அளவு ஊறவைத்த புளியினை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக மைபோல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
மிளகு குழம்பு எப்படி செய்வது (chettinad kulambu varieties in tamil) ஸ்டேப்: 4
Kulambu Varieties in Tamil:- பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு சூடேறியதும், 1/4 டீஸ்பூன் கடுகு, உளுத்தப்பருப்பு 1/4 டீஸ்பூன், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை விளக்கம்..! |
செட்டிநாடு மிளகு குழம்பு எப்படி செய்வது (chettinad kulambu varieties in tamil) ஸ்டேப்: 5
Kulambu Varieties in Tamil:- பின் பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன் சேர்த்து வதக்கவும், பின் இதனுடன் கட் செய்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
மிளகு குழம்பு எப்படி செய்வது (chettinad kulambu varieties in tamil) ஸ்டேப்: 6
Kulambu Varieties in Tamil:- பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். மசாலா நன்கு வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
நாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி ? Easy Chicken Kulambu in Tamil..! |
மிளகு குழம்பு எப்படி செய்வது (chettinad kulambu varieties in tamil) ஸ்டேப்: 7
Kulambu Varieties in Tamil:- பின் இதனுடன் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக குழம்பை கொதிக்கவிடவும். அதாவது ஊற்றிய எண்ணெய் பிரிந்து வரும் அளவிற்கு குழம்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு மிளகு குழம்பு (chettinad milagu kulambu) தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal |