Lunch Box Recipes in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் குழந்தைகளுக்கான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஒன்றைதான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக பள்ளிக்கு செல்லும் நமது குழந்தைகளுக்கு தினமும் எதாவது ஒரு புதுமையான மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவினை செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை நாம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும்.
ஆனால் என்ன செய்து கொடுப்பது என்ற குழப்பமும் இருக்கும். அப்படி குழப்பம் நிறைந்தவர்களுக்கு இந்த பதிவு உதவியானதாக இருக்கும். அதனால் இந்த பதிவில் கூறியுள்ள லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்துப்பாருங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள்=> கத்திரிக்காயுடன் முட்டை மட்டும் சேர்த்து இந்த டிஸ் செய்துபாருங்கள்..!
Lunch Recipes in Tamil:
முதலில் இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபிக்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- வெங்காயம் – 2
- கேரட் – 1
- தக்காளி – 1
- மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
- கரம்மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்
- முட்டை – 2
- மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
- கொத்தமல்லியிலை – 1 கைப்பிடி அளவு
- பிரெட் – 8 பீஸ்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 2 வெங்காயம், 1 கேரட் மற்றும் 1 தக்காளி ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை ஊற்றி அதில் நாம் நறுக்கிவைத்துள்ள வெங்காயம்,கேரட் மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
இவையெல்லாம் நன்கு வதங்கியவுடன் அதனுடன் 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/4 டீஸ்பூன் கரம்மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி அதனை சிறிது நேரம் ஆறவிடுங்கள். இப்போது மசாலா தயாராகிவிட்டது.
ஸ்டேப் – 3
அடுத்து ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்துவைத்துள்ள 2 முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய 1 கைப்பிடி அளவு கொத்தமல்லியிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பிறகு நாம் எடுத்துவைத்துள்ள 8 பீஸ் பிரெட்டிலிருந்து இரண்டினை எடுத்து அதன் நடுவில் தயார் செய்துவைத்துள்ள மாசாலவை வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை நாம் தயார் செய்து வைத்திருந்த முட்டையில் நனைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் – 5
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி அதில் முட்டையில் நனைத்து எடுத்து வைத்துள்ள பிரெட்டுகளை போட்டு முன்னும் பின்னும் பிரட்டி போட்டு நன்கு வேகவைத்து எடுத்துகொள்ளுங்கள்.
இப்பொழுது நமது குழந்தைகளுக்கான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ரெடி. இதனை உங்களின் குழந்தைகளுக்கும் செய்துகொடுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |