மராத்தி ஸ்டைல் மசாலா தோசை இப்படி செய்து சாப்பிடுங்கள்..!

marathi masala dosa recipe in tamil

Marathi Masala Dosa Recipe in Tamil

வீட்டில் எப்போதுமே ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். வித்தியாசமாக சாப்பிடலாம் என்று தோன்றும். தோசையை விட அதிகமாக சட்னி செய்ய தான் கஷ்டமாக இருக்கும். ஏனென்றால் நமக்கு தெரிந்த சட்னி அனைத்தையும் செய்து சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். சமைக்கவும் ஆசை இருக்காது.

ஆகவே தினமும் வித்தியாசமான தோசையை செய்து சாப்பிடுங்கள். மேலும் இன்று சூப்பரான மராத்தி  மசால் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். படித்து இன்று இரவே இந்த மசால் தோசையை செய்து சாப்பிடுங்கள் வாங்க அது எப்படி செய்வது என்று பார்ப்போம்..!

Marathi Masala Recipe in Tamil:

இதையும் செய்து பாருங்கள் ⇒ மாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்:

  1. ரவை – 1/2 கப்
  2. வெங்காயம்
  3. தக்காளி
  4. கடுகு
  5. பட்டர்
  6. எண்ணெய்
  7. கொத்தமல்லி
  8. நல்ல காரம் பொடி

Marathi Masala Dosa Recipe in Tamil:

ஸ்டேப்: 1

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு தேவையான அளவு கடுகு சேர்க்கவும். அடுத்து கடுகு பொரிந்த பின் அதில் ரவை போட்டு வறுத்த பின் அதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவும். ரவை கட்டி இல்லாமல் பெஸ்ட் போல் வறுத்து எடுத்துகொள்ளளவும் அதனை தனியாக எடுத்து கிண்ணத்தில் வைத்துக்கொள்ளவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அசைவ சாப்பாட்டினை மிஞ்சும் அளவிற்கு சுவையான பன்னீர் மசாலா கிரேவி இப்படி செய்து பாருங்கள்..!

ஸ்டேப்: 2

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து  தோசையை ஊற்றி அதன் மீது செய்து வைத்திருந்த ரவையையும் பட்டரையும் கொஞ்சம் சேர்த்து அனைத்து பக்கமும் கலந்துவிடவும்.

முட்டை தோசை சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் இந்த மாதிரி செய்து சாப்பிட்டு இருக்கீர்களா..?

ஸ்டேப்: 3

அதன் கூடவே நல்ல காரா பொடி சேர்த்து அனைத்து பக்கமும் கலந்துவிட்டு மேல் பக்கம் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை சேர்த்து கடைசியாக மேல் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுத்து சாப்பிடால் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும் ஒரு முறை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க இதற்கு சட்னி எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.

ஒரே மாவில் 5 வையான தோசை ரெசிபி செய்முறை..!

 

இதுபோன்ற சுவைசுவையான சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவைசுவையான சமையல் குறிப்புகள்