Masala Vadai Recipe in Tamil
தினமும் நமது பதிவின் மூலம் மிகவும் ருசியான மற்றும் எளிமையான ஒரு சமையல் குறிப்பு பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் மிகவும் ருசியான மற்றும் மிகவும் எளிய முறையில் மசாலா வடை செய்வது எப்படி என்று பார்க்க இருக்கின்றோம். அதுவும் கடலைப்பருப்பு பயன்படுத்தாமல் எப்படி மசாலா வடை செய்வது என்று பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து கடலைப்பருப்பு பயன்படுத்தாமல் எப்படி மசாலா வடை செய்வது என்று அறிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Paruppu Vadai Recipe in Tamil:
பொதுவாக மசாலா வடை செய்ய வேண்டும் என்றால் கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்து என்று பல செய்முறை இருக்கும். ஆனால் இனிமேல் மசாலா வடை செய்வதற்கு கடலைப்பருப்பை ஊறவைக்க வேண்டாம் அரைக்க வேண்டாம். ஏன் கடலைபருப்பே வேண்டாம். அது எப்படி செய்வது என்று விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பொட்டுக்கடலை – 2 கப்
- கேரட் துருவல் – 1 1/2 கப்
- வெங்காயம் – 2
- இஞ்சி – 1 சிறிய துண்டு
- பச்சைமிளகாய் – 4
- சீரகதூள் – 1 டீஸ்பூன்
- மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
இதையும் படித்துப்பாருங்கள்=> மெது வடை மசால் வடை சாப்பிட்டிருப்பீங்க சோளம் வடை சாப்பிட்டிருக்கீங்களா
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் பொட்டுக்கடலை மற்றும் 1 சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் கொட்டி கொள்ளுங்கள். அதனுடன் 2 வெங்காயம், 4 பச்சை மிளகாய், 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> சத்தான காய்கறிகளை வைத்து சுட சுட வடை இப்படி செய்து பாருங்கள்
ஸ்டேப் – 3
பிறகு அதனுடனே 1 1/2 கப் கேரட் துருவல், 1 டீஸ்பூன் சீரகதூள், 1 டீஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வடைபோல் தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு நன்கு பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது மசாலா வடை தயாராகிவிட்டது வாங்க சுவைக்கலாம். இந்த எளிமையான முறையான மசாலா வடை ரெசிபியை நீங்களும் ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |