பக்கத்து வீடு வரை மணக்கும் இப்படி ஆட்டுக்கறி குழம்பு செஞ்சா..! | Mutton Kulambu Recipe in Tamil

Mutton Kuzhambu Recipe in Tamil

ஆட்டுக்கறி குழம்பு வைப்பது எப்படி? | Mutton Kuzhambu Recipe in Tamil

அசைவம் என்றால் போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அசைவத்தில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிலருக்கு கோழி, மீன், இறால், நண்டு போன்றவை பிடிக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு ஆட்டுக்கறி பிடிக்காது, ஒரு சிலர் ஆட்டுக்கறி குழம்பை விரும்பி சாப்பிடுவர்கள். அப்படி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகுப்பில் ஆட்டுக்கறி குழம்பு மிகவும் சுவையாக எப்படி வைக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்:

 1. மட்டன் – தேவையான அளவு
 2. மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 3. மஞ்சள் தூள் – 3 சிட்டிகை
 4. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
 5. உப்பு – சிறிதளவு
 6. எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
 7. பட்டை – 3
 8. ஏலக்காய் – 3
 9. கிராம்பு – 4
 10. ஸ்டார் பூ – 1
 11. மல்லி – 3 டேபிள் ஸ்பூன்
 12. மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
 13. பச்சை மிளகாய் – 2
 14. தோல் சீவிய இஞ்சி – 1
 15. தோல் உரித்த பூண்டு – 10
 16. நறுக்கிய வெங்காயம் – 1
 17. சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்
 18. பிரியாணி இலை – 2
 19. நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் – 2
 20. சிகப்பு மிளகாய் – 3
 21. நறுக்கிய தக்காளி – 1
 22. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

ஆட்டுக்கறி குழம்பு வைப்பது எப்படி

ஸ்டேப்: 1

 • ஆட்டுக்கறி குழம்பு வைப்பது எப்படி: ஒரு பௌலில் தேவையான அளவு மட்டன் எடுத்து அதை சுத்தபடுத்தி கொள்ளவும். பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் 3 சிட்டிகை, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன், உப்பு சிறிதளவு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இதை ஒரு 10 நிமிடம் அப்படியே ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 2 

 • பிறகு ஒரு மிக்சி ஜாரில் பட்டை 3, ஏலக்காய் 3, கிராம்பு 4, ஸ்டார் பூ 1, மல்லி 3 டேபிள் ஸ்பூன், மிளகு 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடியாக்கி கொள்ளவும்.

ஸ்டேப்: 3 

 • Mutton Kulambu Recipe in Tamil: பின்னர் அரைத்து வைத்த பொடியுடன் பச்சை மிளகாய் 2, தோல் சீவிய இஞ்சி 1, தோல் உரித்த பூண்டு 10, நறுக்கிய வெங்காயம் 1 மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 4

 • ஆட்டுக்கறி குழம்பு எப்படி வைப்பது: பிறகு ஒரு கடாயில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு சீரகம் அரை டேபிள் ஸ்பூன், பிரியாணி இலை 2, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 2, சிகப்பு மிளகாய் 3 சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் வதங்கிய பின்பு நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கவும். வதக்கிய பின்பு மிக்ஸ் செய்து வைத்திருக்கும் ஆட்டுகறியை சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.

ஸ்டேப்: 5 

 • Mutton Kuzhambu Recipe in Tamil: 10 நிமிடம் கழித்து அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை சேர்த்து நன்றாக கிளறவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 40 நிமிடம் வேகவைக்கவும்.
 • 40 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான ஆட்டுக்கறி குழம்பு தயார்.
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்முறை விளக்கம்..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil