அசத்தலான நண்டு குழம்பு செய்யலாம் வாங்க..! | Nandu Kulambu Seivathu Eppadi

நண்டு குழம்பு செய்வது எப்படி? | Nandu Kulambu Eppadi Seivathu

சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். அதிலும் அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவத்தில் பலவித டிஷ்கள் உள்ளது கோழி, மீன், இறால், நண்டு என்று அடுக்கி கொண்டே போகலாம்.  அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். அந்த வகையில் நாம் இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் கமகமக்கும் சூப்பரான நண்டு குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

நண்டு குழம்பு எப்படி செய்வது

பேஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:

  1. நறுக்கிய வெங்காயம் – 2
  2. தோல் உரித்த பூண்டு – 4
  3. இஞ்சி – 1 துண்டு
  4. காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  5. கசகசா – அரை டேபிள் ஸ்பூன்
  6. சீரக தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  7. பெருஞ்சீரக தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
  9. மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • நண்டு குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு பேஸ்ட் தயார் செய்ய வேண்டும், அதற்கு ஒரு மிக்சி ஜாரில் நறுக்கிய வெங்காயம் இரண்டு, தோல் உரித்த பூண்டு 4, தோல் நீக்கிய இஞ்சி 1 துண்டு, 2 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் (சாதாரண மிளகாய் தூளும் சேர்த்து கொள்ளலாம்), அரை டேபிள் ஸ்பூன் கசகசா, 1 டேபிள் ஸ்பூன் சீரக தூள், 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரக தூள், அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள், 2 டேபிள் ஸ்பூன் Curry Powder இவை அனைத்தையும் ஒரு பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளவும்.

குறிப்பு: Curry Powder வீட்டில் செய்வதற்கு மல்லி, சீரகம், கடுகு, சிவப்பு மிளகாய், மிளகு, பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய் தேவையான அளவு எடுத்து வறுத்து கொள்ளவும் பின் அதை ஒரு மிக்சியில் போட்டு மாவு போல அரைத்து கொண்டால் Curry Powder தயாராகிவிடும்

தேவையான பொருட்கள்:

  1. நண்டு – தேவையான அளவு
  2. நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  3. கருவேப்பிலை – 1 கொத்து
  4. தண்ணீர் – தேவையான அளவு
  5. தக்காளி – 2
  6. உப்பு – தேவையான அளவு
  7. தேங்காய் பால் – 1 கப்

செய்முறை:

ஸ்டேப்: 1 

  • Nandu Kulambu Seivathu Eppadi: ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், 1 கொத்து கருவேப்பிலை சேர்க்கவும். அதன் பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2 

  • நண்டு குழம்பு செய்வது எப்படி? பின் அதில் தேவையான அளவு தண்ணீர், நறுக்கிய தக்காளி 2 சேர்த்து கிரேவியாகும் வரை வேகவைக்கவும். கிரேவியான பிறகு அதில் தேவையான அளவு நண்டு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி நண்டு பாதியளவு வேகும் வரை வேகவைக்கவும்.

ஸ்டேப்: 3

  • நண்டு பாதியளவு வெந்தபிறகு 1 கப் தேங்காய் பால் சேர்த்து மூடி வேகவைக்கவும். அவ்வளவு தான் சுவையான நண்டு குழம்பு ரெசிபி தயார்.
வீடே மணக்க மணக்க இறால் கிரேவி செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்