உடல் எடையைக் குறைக்க வேண்டுமா..? அப்போ நவதானிய அடையை இப்படி செய்து சாப்பிடுங்கள்..!

Advertisement

நவதானிய அடை தோசை..! | Navadhanya Dosa in Tamil..!

இக்காலத்தில் உள்ள பல பேர் உடல் எடையை குறைப்பதற்கு பல விதமான செயற்கை பொருட்கள் சாப்பிடுவதையும், சாப்பிடாமல்  டயட் எடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அவர்கள்  உடம்பிற்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் வரும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கையாகவே உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க முடியும். அது எப்படி என்று தானே கேட்கிறீர்கள்..? அதுதான் இந்த நவதானிய அடை. உடல் எடையை குறைக்க உதவும் இந்த நவதானிய அடை எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உடல் எடையை குறைக்கும் நவதானிய அடை:

நவதானிய அடை செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  1. கோதுமை – 100 கிராம் 
  2. அரிசி – 200 கிராம் 
  3. துவரம் பருப்பு – 100 கிராம் 
  4. பச்சைப்பயிறு –100 கிராம் 
  5. கொண்டைக்கடலை – 100 கிராம் 
  6. மொச்சை –100 கிராம்
  7. எள்ளு- 1 கைப்பிடி அளவு 
  8. கருப்பு உளுந்து – 100 கிராம்
  9. கொள்ளு – 1 கைப்பிடி அளவு 
  10. இஞ்சி – 1 பெரிய துண்டு 
  11. காய்ந்த மிளகாய் – 5
  12. மிளகு – 1 டீஸ்பூன் 
  13. சீரகம் – 1 டீஸ்பூன் 
  14. கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு 
  15. நல்லெண்ணெய் – தேவையான அளவு
  16. உப்பு – தேவையான அளவு

மராத்தி ஸ்டைல் மசாலா தோசை இப்படி செய்து சாப்பிடுங்கள்..!

நவதானிய அடை செய்யும் முறை:

ஸ்டேப் -1:

கோதுமை, அரிசி, துவரம் பருப்பு, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, மொச்சை, எள்ளு, கருப்பு உளுந்து , கொள்ளு இவற்றை எல்லாம் முதல் நாள் இறவே தண்ணீரில் ஊறவைத்து விட வேண்டும்.

ஸ்டேப் -2:

how to make navadhanya dosa

பிறகு ஊறவைத்த நவதானியத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3:

navadhanya adai recipe

பிறகு அந்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு 5 நிமிடம் வைத்து விடுங்கள்.

ஸ்டேப் -4:

அதற்கு பிறகு தோசை கல்லில் இந்த மாவை அடையாக ஊற்றி மேலே நல்லெண்ணெய் விட்டு அடை பொன் நிறமாக வந்ததும் எடுத்தால் அருமையான மொறுமொறுப்பான நவதானிய அடை ரெடி.

இந்த நவதானிய அடையை நீங்கள் காலை உணவாக எடுத்து கொண்டால் இயற்கையாகவே உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ ஆரோக்கியமான ராகி பக்கோடா சுவையாக செய்யலாம் வாங்க.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement