பாரம்பரிய முறையில் பால் பொங்கல் செய்வது எப்படி?

Paal Pongal  Recipe in Tamil

பால் பொங்கல் செய்முறை – Paal Pongal  Recipe in Tamil

அனைவருக்கும் தை திருநாள் நல்வாழ்த்துக்கள்.. பொங்கல் அன்று அனைவரது வீட்டிலும் சர்க்கரை பொங்கல் மற்றும் பால் பொங்கல் செய்வது வழக்கம். இவற்றில் பால் பொங்கலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பால் பொங்கல் என்று சொல்லப்படும் வெண் பொங்கலை பாரம்பரிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோமா… சரி வாங்க பாரம்பரிய வெண் பொங்கல் எப்படி செய்வது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

Ven Pongal Ingredients in Tamil – தேவையான பொருட்கள்:

  1. பச்சை அரிசி – ஒரு கப்
  2. தண்ணீர் – 6 கப்
  3. உப்பு – தேவையான அளவு
  4. பால் – ஒரு கப்

வெண் பொங்கல் செய்முறை – பால் பொங்கல் செய்முறை – வெள்ளை பொங்கல் செய்முறை:

  1. ஒரு கப் பச்சை அரிசியை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் தண்ணீரை ஊற்றி 1/2 மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.
  2. பின் தங்கள் வீட்டில் உள்ள பொங்கல் பானையை எடுத்து அவற்றில் விபூதி இட்டு குங்குமம் வைத்து, இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்தினை கட்டி ஆறு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பசும் பால் ஊற்றி அடுப்பில் வைக்கவும். (அரிசி கழுவிய நீரை பயன்படுத்த வேண்டும்).
  3. பின்பு  அடுப்பை பற்ற வைத்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்து பொங்கி வரும் போது. ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து கிளறி விடுங்கள்.
  4. பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இந்த வெண் பொங்கலை 1/4 மணி நேரம் வேகவைக்க வேண்டும். அதேபோல் அடிபிடிக்காமல் இருப்பதற்காக அவ்வப்போது கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  5. 1/4 மணி நேரம் கழித்து பொங்கலை அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளலாம். அவ்வளவு தான் பொங்கல் அன்று செய்யக்கூடிய வெண் பொங்கல் தயார்.
  6. கிராமங்களில் பொங்கல் பானையில் உலை வைக்கும் போது அந்த உலை நீரில் சிறிதளவு அருகம்புல் போடுவது வழக்கம். தங்களுக்கு விருப்பம் இருந்தால் அருகம்புல் சேர்த்துக்கொள்ளுங்கள் இல்லை என்றால் தவிர்த்து கொள்ளலாம்.

சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் –> சர்க்கரை பொங்கல் வைப்பது எப்படி?

21 வகை காய்கறிகள் சேர்த்து பொங்கல் குழம்பு செய்முறை..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்