Pomegranate Halwa Recipe in Tamil
பொதுவாக மாதுளை பழத்தில் பல சத்துக்கள் உள்ளது என்பது நாம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அதனை சாப்பிடுவது குழந்தைகள் முதல் சில பெரியவர்களுக்கு கூட பிடிக்காது. அதனால் தான் அதனை ஜூஸாக தயாரித்து தருவீர்கள் ஆனால் அதனையும் சிலர் குடிக்க மறுப்பார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் மாதுளை பழத்தை பயன்படுத்தி அல்வா செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள ரெசிபியை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Easy Pomegranate Dessert Recipes in Tamil:
மாதுளை பழத்தை பயன்படுத்தி அல்வா செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- மாதுளை பழம் – 6
- சர்க்கரை – 1 கப்
- சோளமாவு – 1 கப்
- பாதாம் – 10
- பிஸ்தா – 10
- முந்திரி – 10
செய்முறை:
மாதுளை பழத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 6 மாதுளை பழங்களையும் வைத்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் அதில் உள்ள தோலினை நீக்கி விட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதில் உள்ள சாற்றினை மட்டும் வடிகட்டி கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள் => 90’s கிட்ஸ் ஸ்பெஷல் தேன் மிட்டாய் செய்வது இவ்வளவு ஈஸியா..?
கடாயை எடுத்து கொள்ளவும்:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் வடிகட்டி வைத்துள்ள மாதுளை சாற்றினை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.
சோள மாவினை சேர்த்து கொள்ளவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் சோள மாவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
சர்க்கரையினை சேர்த்து கொள்ளவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் சர்க்கரையினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளுங்கள்.
பிறகு அதன் மீது நாம் எடுத்து வைத்துள்ள 10 பாதாம், 10 பிஸ்தா மற்றும் 10 முந்திரி ஆகியவற்றை சிறிது சிறிது நறுக்கி தூவி கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது மாதுளை பழம் அல்வா ரெடி வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த மாதுளை பழம் அல்வா ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள் => சுவையான ஆல்வா வீட்டுலேயே சுலபமாக செய்யலாம் வாங்க.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |