பூரி செய்வது எப்படி.?
வணக்கம் நண்பர்களே.! கடையில் விற்கும் பூரி ரொம்பவும் பிடிக்கும். கடாயில் விற்கும் பூரி உப்பலாகவும், மிருதுவாகவும் இருக்கும். அதை சாப்பிட சாப்பிட ஆசையாக இருக்கும். நாம் வீட்டில் என்ன தான் மாவை பிசைந்தாலும் கடையில் விற்கும் பூரி போல வராது. பூரி மட்டுமில்லை சப்பாத்தியும் சூப்பராக இருக்கும். வீட்டில் சப்பாத்தி செய்தால் சாப்டாக இருக்காது. வாங்க இந்த பதிவில் பூரி உப்பலாகவும், சாப்டாகவும் செய்வது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பூரி உப்பலாக வர தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு-1 கப்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
- சாதம் வடித்த கஞ்சி – தேவையான அளவு
இதையும் படியுங்கள் ⇒ அரிசி மாவில் பூரி சுட முடியும்.! உங்களுக்கு தெரியுமா.?
பூரி உப்பலாக செய்வது எப்படி.?
ஸ்டேப்:1
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவு கோதுமை மாவு சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவு உப்பு, எண்ணெய், சாதம் வடித்த கஞ்சியை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்து கொள்ளுங்கள். கஞ்சி தண்ணீர் ஊற்றி பிணையும் போது பூரி சாப்டாக இருக்கும்.
ஸ்டேப்:2
பூரி மாவை பிணையும் போது நன்றாக அழுத்தம் கொடுத்து பிணைய வேண்டும். மாவு பிணைந்த பிறகு ஒரு 20 அப்படியே இருக்கட்டும்.
ஸ்டேப்:3
20 நிமிடம் கழித்து மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்ட வேண்டும். முக்கியமாக உருண்டை உருட்டு போது விரிசல் இல்லாமல் அழுத்தமாக உருட்ட வேண்டும்.
ஸ்டேப்:4
பிறகு பூரி கட்டையை எடுத்து உருட்டி வைத்த மாவை சேர்த்து தேய்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்:5
அடுத்து அடுப்பில் கடையை வைத்து பொறிப்பதற்கு தேவையான அளவு ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் தேய்த்து வைத்து பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுங்கள். பூரியை எண்ணெயில் போடும் போது மேலே எண்ணெயை ஊற்றி விடுங்கள். இப்படி பண்ணும் போது பூரி உப்பலாக வரும்.
இதையும் படியுங்கள் ⇒ எண்ணெய் இல்லாமல் பூரி சுட முடியுமா.? இனிமேல் சுடலாம் வாங்க..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |