சோளம் வடை
வணக்கம் நண்பர்களே..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வடையை விரும்பி சாப்பிடுவார்கள். பருப்பு வடை, உளுந்து வடை, மசால் வடை என வடையில் பல வகைகள் உள்ளது. அதில் நாம் உடலுக்கு ஆரோக்கியமான சோளம் மற்றும் கீரையை வைத்து வடை செய்திருக்கீர்களா..! செய்யவில்லை என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து எப்படி வடை செய்வது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ தவலை வடை செய்வது எப்படி?
வடை செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சை மிளகாய் – 3
- வரமிளகாய் – 2
- பூண்டு பல் – 5,
- இஞ்சி – 1
- மிளகு – 1/2 தேக்கரண்டி
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- சோம்பு – 1/2 தேக்கரண்டி
- ஸ்வீட் கான் – 2 கைப்பிடி
- வெங்காயம்-2
- கீரை-தேவையான அளவு
- அரிசி மாவு -2 தேக்கரண்டி
வடை செய்முறை:
ஸ்டேப்:1
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். அதில் பச்சை மிளகாய் 3, வரமிளகாய் 2, பூண்டு பல் – 5, நறுக்கிய இஞ்சி 1 , மிளகு 1/2 தேக்கரண்டி, சீரகம் 1/2 தேக்கரண்டி, சோம்பு 1/2 தேக்கரண்டி , ஸ்வீட் கான் 2 கைப்பிடி சேர்த்து அரைக்கவும். முக்கியமானது தண்ணீர் ஊற்றாமல் பவுடராக அரைத்து கொள்ளவும்.
ஸ்டேப்:2
பிறகு 2 வெங்காயம் மற்றும் கீரையை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
ஸ்டேப்:3
பிறகு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு 2 தேக்கரண்டி, சிறிதாக நறுக்கிய வெங்காயம், சிறியதாக நறுக்கிய கீரை, தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்த பவுடர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். மசால் வடைக்கு எப்படி பிசைந்து கொள்வீர்களோ அதே போல் பிசைந்து கொள்ளவும்.
ஸ்டேப்:4
பிறகு அடுப்பை பற்ற வையுங்கள். அதில் ஒரு எண்ணெய் சட்டியை வையுங்கள். அதில் வடை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
ஸ்டேப்:5
எண்ணெய் காய்ந்தவுடன் பிசைந்து வைத்த மாவை மசால் வடை போல் தட்டி கொள்ளுங்கள். பிறகு எண்ணெயில் பொரித்து எடுங்கள். அவ்வளவு தாங்க உடலுக்கு ஆரோக்கியமான வடை ரெடி ருசிக்கலாம் வாங்க..
ஸ்டேப்:6
இந்த வடைக்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும். இந்த வடையை இரு முறை செய்து பாருங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |