பொரி உருண்டை செய்வது எப்படி? | Pori Urundai Recipe in Tamil
எல்லோருக்குமே பொரி உருண்டை மிகவும் பிடித்த உணவு. இதை நாம் கடைகளில் வாங்கி தான் சாப்பிட்டு இருப்போம். கிராமங்களில் பொரி உருண்டை சற்று எளிமையாகவும், விலை குறைவாகவும் இருக்கும். நகர்ப்புறங்களில் அவ்வளவு எளிதில் பொரி உருண்டை கிடைத்துவிடாது. அதனால் இந்த பொரி உருண்டையை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக எப்படி எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- வெல்லம் – 200 கிராம் (தூள் வெல்லம்)
- தண்ணீர் – அரை டம்ளர்
- ஏலக்காய் பொடி – அரை டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பொடி – அரை டேபிள் ஸ்பூன்
- உப்பு – ஒரு சிட்டிகை
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
- பொறி – 5 கப்
பொரி உருண்டை செய்முறை:
ஸ்டேப்: 1
- Pori Urundai Method in Tamil: முதலில் ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய், 200 கிராம் வெல்லம் (தூள் வெல்லம்) அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸ் செய்து கொதிக்க வைக்கவும்.
ஸ்டேப்: 2
- Pori Urundai Seivathu Eppadi in Tamil: கொதிக்கும் பொழுது அதில் அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி, அரை டேபிள் ஸ்பூன் இஞ்சி பொடி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெல்லம் பாகு ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
- வெல்லம் பாகு ஆகிவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு துளி பாகை விடவும். பாகு உருண்டை வடிவில் தண்ணீரில் மிதந்தால் பாகு தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
ஸ்டேப்: 3
- பொரி உருண்டை செய்வது எப்படி? பாகு தயாரானதும் அடுப்பை Off செய்து விட்டு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்கவும் (தேன் வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதை சேர்க்க வேண்டாம்).
ஸ்டேப்: 4
- Pori Urundai Recipe in Tamil: பின் அதில் 5 கப் பொரியை (பொரி மொறுகளாக இருக்க வேண்டும்) சேர்த்து பாகில் நன்றாக மிக்ஸ் பண்ணவும். மிக்ஸ் செய்த பிறகு பொரி கலவையை வேறொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும். பின் கையை கழுவி விட்டு உங்களுக்கு எந்த வடிவில் வேண்டுமோ அந்த வடிவில் உருட்டி 10 நிமிடம் காய வைக்கவும்.
ஸ்டேப்: 5
- Pori Urundai in Tamil: பத்து நிமிடம் கழித்து பார்த்தால் பொரி நன்றாக மொறுமொறுவென்று கடையில் விற்பது போல வந்திருக்கும். இதை நீங்கள் குழந்தைகளுக்கு ஈவ்னிங் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பொறி அரிசி உருண்டை செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |