உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை | Potato Fry in Tamil
பொதுவாக பலருக்கு பிடித்த வறுவல் தான் உருளைக்கிழங்கு வறுவல். இருந்தாலும் எல்லாருமே உருளைக்கிழங்கு வறுவலை ஒரே மாதிரி தான் வறுப்பார்கள். இருந்தாலும் உருளைக்கிழங்கை வித்தியாசமாக வறுத்து சாப்பிடு பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். உருளைக்கிழங்கை வித்தியாசமான முறையில் உங்களுக்கு வறுக்க தெரியாது என்றாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. இன்றைய பதிவில் உருளைக்கிழங்கை வித்தியாசமான முறையை வறுக்கும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க உருளைக்கிழங்கை வித்தியாசமான முறையில் எப்படி வறுக்கலாம் என்று இப்பொழுது நாம் பாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 4
- வரமிளகாய் – 5
- மல்லி – ஒரு ஸ்பூன்
- மிளகு – ஒரு ஸ்பூன்
- பெருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்
- வெள்ளை உளுந்து – ஒரு ஸ்பூன்
- கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- உப்பு – தேவையான அளவு
- இஞ்சி பூண்டு – தட்டியது சிறிதளவு
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- பெரிய வெங்காயம் – ஒன்று பொடிதாக நறுக்கியது
- கடுகு – 1/2 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி இந்த மாதிரி செய்து பாருங்க
உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி சதுர வடிவில் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
நறுக்கிய உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும், பிறகு சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து உருளைக்கிழங்கை முக்கால் பதத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் வரமிளகாய், மிளகு, பெருஞ்சீரகம், கடலைப்பருப்பு, மல்லி மற்றும் வெள்ளை உளுந்து சேர்த்து நன்றாக 5 நிமிடம் வராகவும். இவ்வாறு வருத்தபின் மிக்ஸி ஜாரில் செய்து நன்கு பவுடர் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் 1/2 ஸ்பூன் கடுகு செய்து தாளிக்கவும். பின் அதனுடன் தட்டிய இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும்.
பின் இரண்டு கொத்து கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் இவை இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கி வந்ததும் வேகவைத்த உருளைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு செய்து நன்றாக கிளற வேண்டும். 5 முதல் 10 நிமிடம் வேகவைத்து இறக்கினால் அருமையான மற்றும் ருசியான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி. கண்டிப்பாக வீட்டில் இரு முறை ட்ரை செய்து பாருங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 நிமிடத்தில் பிரட் உப்புமா செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |