வீடே மணக்க மணக்க இறால் கிரேவி செய்வது எப்படி? | Prawn Gravy in Tamil

இறால் கிரேவி செய்முறை | Prawn Gravy Recipe Tamil

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். நாம் இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் மிகவும் ருசியாக இறால் கிரேவி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

சிக்கன் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா ஆள தூக்கும்

தேவையான பொருட்கள்:

இறால் கிரேவி செய்முறை

 1. இறால் – அரை கிலோ
 2. பட்டை துண்டு – 1
 3. கிராம்பு –  2
 4. ஏலக்காய் – 2
 5. சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
 6. வெங்காயம் – 2 நறுக்கியது
 7. தக்காளி – 2 நறுக்கியது
 8. பச்சை மிளகாய் – 2 கீறியது
 9. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
 10. உப்பு – தேவையான அளவு
 11. மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 12. மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 13. கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
 14. மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 15. தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 16. சோம்பு தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 17. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
 18. கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:

இறால் தொக்கு செய்வது எப்படி?

ஸ்டேப்: 1

 • Prawn Gravy Recipe Tamil: அரை கிலோ அல்லது தேவையான அளவு இறால் எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
 • பின் ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு பட்டை துண்டு 1, கிராம்பு 2, ஏலக்காய் 2, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
இறால் பிரியாணி செய்வது எப்படி?

 

ஸ்டேப்: 2

 • Prawn Gravy in Tamil: பின் அதில் நறுக்கிய வெங்காயம் 2, சிறிதளவு கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன், சிறிதளவு உப்பு, கீறிய பச்சை மிளகாய் 2 சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 3

 • இறால் தொக்கு செய்வது எப்படி? பெரிய தக்காளியாக இருந்தால் 2 எடுத்து கொள்ளுங்கள், சிறியதாக இருந்தால் 3 எடுத்து கொண்டு அதை பொடிதாக நறுக்கி கொள்ளுங்கள்.
 • பின்னர் அதில் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் சோம்பு தூள், 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வேக வைக்கவும்.

ஸ்டேப்: 4

 • இறால் தொக்கு ரெசிபி: தக்காளி வெந்து தொக்கு கண்டிஷனுக்கு வந்தவுடன் இறால் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும்.
 • பின் அதன் மேல் 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம், இப்போது சுவையான இறால் கிரேவி தயார்.
சிம்பிளான செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி ?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்