கோவிலில் செய்வது போல் புளிசாதம் எப்படி செய்வது..!

kovil puli sadam seivathu eppadi in tamil

Perumal Kovil Puli Sadam Seivathu Eppadi

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பிடித்தமான புளிசாதம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். அனைவருக்கும் புளி சாதம் பிடிக்கும் என்று சொல்லமுடியாது ஆனால் பிடிக்காது என்று சொல்பவர்களுக்கு பெருமாள் கோவிலில் செய்யும் புளியோதரை அனைவருக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் எப்படி செய்தாலும் கோவில் புளியோதரை போல் இருக்காது. அவர்கள் எப்படி என்னதான் சேர்ப்பார்கள் வாங்க தெரிந்துகொள்ளலாம்.

கோவில் புளி சாதம் செய்வது எப்படி?

 1. புளி –100 கிராம்
 2. மிளகாய் – 50 கிராம்
 3. கடலைப்பருப்பு – 20 கிராம்
 4. உளுத்தப்பருப்பு – 20 கிராம்
 5. நல்ல எண்ணெய் – 200 கிராம்
 6. மஞ்சள் பொடி – 10 கிராம்
 7. நிலக்கடலை – 100 கிராம்
 8. கடுகு – 10 கிராம்
 9. வெந்தயம் – 10 கிராம்
 10. உப்பு – தேவையான அளவு
 11. கருவேப்பிலை – 5 கொத்து
 12. பெருங்காயம் – 20 கிராம்

புளி சாதம் எப்படி செய்வது:

ஸ்டேப் – 1 

முதலில் புளியை எடுத்து நன்கு கரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 2

காய்ந்த மிளகாயை சிறிய சிறிய தூண்ட நறுக்கிக்கொள்ளவும். அதனில் ஒரு இரண்டு பாதியாக பிரித்து ஒரு பாதியை எண்ணெயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 3

அதேபோல் வெந்தயத்தையும் வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 4

இப்போது மிக்சி ஜாரில் வறுத்த மிளகாய் வெந்தயம் பெருங்காயத்தை சேர்த்து பவுடர் போல் அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 5

மறுமுறை கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தப்பருப்பு சேர்த்து வறுத்து வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் – 6

வறுத்தவைத்த கடலை பருப்பு, உளுத்தம்பருப்பை புளிச்சாறுடன் சேர்த்துக்கொள்ளவும். அதாவது ஊறவிடவும்.

ஸ்டேப் – 7

மறுமுறையும்  கடாயில் நல்லலெண்ணெய் ஊற்றி அதில் மீதம் உள்ள மிளகாயையும், கடுகையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். வருத்தத்துடன் பருப்புகளுடன் சேர்த்து வைத்த புளிக்கரைசலை ஊற்றிவிடவும்.

சேர்த்த உடன் அதனை 10 நிமிடம் கலந்து விடவும்.

ஸ்டேப் – 8

பின்பு அந்த புளிக்கரைசல் நன்கு கொதித்தவுடன் அதில் கருவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் அரைத்துவைத்த பொடி மற்றும் உப்பு  சேர்த்து நன்கு கலந்து விடவும்.

ஸ்டேப் – 9

கெட்டியான பதம் வந்தவுடன் அதனை பாத்திரத்தில் வைத்துகொள்ளவும்.  பிறகு அதனுடன் கடலைப்பருப்பு நல்லெண்ணெய் சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து சாதத்தை சேர்த்து கிளறி சாப்பிடுங்கள். சுவை சூப்பராக இருக்கும்.

இதையும் சேர்த்து 👉👉 கோவில் ஸ்டைல் தயிர் சாதம் செய்வது எப்படி?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்