இட்லி வகைகள் | Idly Vagaigal in Tamil
இட்லி பலருக்கும் பிடிக்காத ஒன்று. ஒரு சிலர் மட்டும் தான் இட்லியை விரும்புவார்கள். பொடி இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். இட்லி பிடிக்காதவர்களுக்கு கூட இப்படி ஒரு தடவை இட்லி செய்து கொடுத்தால் வேணாம் என்றே சொல்ல மாட்டார்கள். அப்படி என்ன இட்லி என்று யோசித்து கொண்டே முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.!
ரவா இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
- ரவா – 1 கப்
- கடுகு –1 தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு –1 தேக்கரண்டி
- கடலை பருப்பு –1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை –1 கைப்பிடி
- கொத்தமல்லி தழை -சிறிதளவு
- தயிர் –3/4 கப்
- உப்பு -தேவையான அளவு
- தண்ணீர் –1 கப்
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: 👉 https://bit.ly/3Bfc0Gl
ரவா இட்லி செய்முறை:
ஸ்டேப்:1
அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி இரண்டாக உடைத்த முந்திரி பருப்பு சேர்த்து சிவந்த நிறம் வரும் வரை வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.
ஸ்டேப்:2
அதே கடாயில் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி கடலை பருப்பு, 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1 துண்டு இஞ்சி நறுக்கியது,பொடிதாக நறுக்கிய 1 பச்சை மிளகாய், 1/2 தேக்கரண்டி பெருங்காய தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் 1 கப் ரவா சேர்த்து வதக்கவும். இந்த பொருட்கள் சேர்த்து வதக்கும் பொழுது அடுப்பை குறைந்த அளவில் வைக்க வேண்டும். ரவா சூடு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
இதையும் செய்து பாருங்கள் ⇒ 2 நிமிடத்தில் மங்களூர் இஞ்சி சட்னி அட இட்லி தோசைக்கு சுவை சூப்பராக இருக்கும்..!
ஸ்டேப்:3
கடாயிலுருந்து வேற பாத்திரத்தில் வதக்கிய பொருட்களை மாற்றி கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு, நீங்கள் எந்த கப்பில் ரவா சேர்த்தீர்களோ அதே கப்பில் 3/4 கப் தயிர் சேர்க்கவும். பின் அதில் கொத்தமல்லி தழை சிறிதளவு, வதக்கி வைத்த முந்திரி சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஸ்டேப்:4
ரவா அளந்த கப்பில் 1 கப் தண்ணீர் ஊற்றி கலந்து ஊற வைக்கவும்.
ஸ்டேப்:5
ரவா ஊறியதும் நீங்கள் மாவு இட்லி எப்படி ஊத்தி வைப்பீர்களோ அதே போல் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இதற்கு சைடிஷாக கார சட்னி வைத்து தொட்டு சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்.
இதையும் செய்து பாருங்கள் ⇒ மீதமுள்ள இட்லியை வைத்து இப்படி கூட செய்யலாமா..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |