ரவா லட்டு செய்வது எப்படி..? | Rava Laddu Recipe in Tamil
பொதுவாக லட்டு என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ரவா லட்டு என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஓகே வாருங்கள் எல்லாருக்கும் பிடித்த ரவா லட்டை சாஃப்ட்டாகவும் டேஸ்டாகவும் செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
ரவா லட்டு டேஸ்டாக செய்வது எப்படி.?
ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
- ரவா – 1/4 கிலோ
- சர்க்கரை – 200 கிராம்
- நெய் – 100 கிராம்
- முந்திரி – 75 கிராம்
- உலர்ந்த திராட்சை – 50 கிராம்
- ஏலக்காய் தூள் – 5 (தூள் செய்து கொள்ளவும்)
- பால் – தேவையான அளவு
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு செய்வது எப்படி..? |
ரவா லட்டு செய்முறை விளக்கம்:
ஸ்டேப்: 1
முதலில் ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை நன்றாக முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
பிறகு, அதே கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
ஸ்டேப்: 3
அடுத்து கடாயில் ரவாவை சேர்த்து அடுப்பை குறைவாக வைத்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து ஆற வைத்து விடுங்கள்.
ஸ்டேப் : 4
அதற்கு பிறகு, சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் போல் அரைத்து கொள்ளுங்கள். இப்போது வறுத்த ரவாவை மிக்சி ஜாரில் இருக்கும் பொருளுடன் சேர்த்து லேசாக அரைத்து கலந்து கொள்ளுங்கள்.
இதையும் பாருங்கள் – பிஸ்கட் லட்டு செய்வது எப்படி ..!
ஸ்டேப்: 5
அரைத்து வைத்துள்ளதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வறுத்து வைத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 6
லட்டு நன்றாக சாஃப்ட்டாக இருக்க அதனுடன் சிறிதளவு காய்ச்சி வைத்த பால் சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டையாக பிடித்து கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க டேஸ்டான ரவா லட்டு ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவ