மிளகு பொங்கல், வெண்பொங்கல் செய்யாமல் இந்த மாதிரி பொங்கல் செய்து பாருங்கள்

rava pongal recipe in tamil

ரவா பொங்கல் செய்வது எப்படி.? |Rava Pongal Recipe in Tamil 

பொங்கலில் பல விதமான பொங்கல்கள் உள்ளது, மிளகு பொங்கல், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் என்று உள்ளது. பலருக்கும் பிடித்தமான உணவாக இருக்கும். பொங்கலுக்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிட்டால் அப்படி இருக்கும். மிளகு பொங்கலை மட்டும் சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ரவா வைத்து கேசரி செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இந்த பதிவில் ரவாவில் பொங்கல் வைத்து சாப்பிட்டு பாருங்கள். அதற்கு இந்த பதிவை முழுமையாக படிக்க வேண்டும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

ரவா பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

  1. ரவா – 1 கப்
  2. பாசிப்பருப்பு – 1/2 கப்
  3. நெய் –50
  4. பச்சை மிளகாய் –
  5. மிளகு, சீரகம் – ஒவ்வொன்றிலும் 1 தேக்கரண்டி
  6. இஞ்சி – 1 தேக்கரண்டி
  7. முந்திரி – 10 
  8. உப்பு – தேவையான அளவு
  9. தண்ணீர் – தேவையான அளவு
  10. கருவேப்பிலை-  சிறிதளவு

செய்முறை:

ரவா பொங்கல் செய்வது எப்படி

பாசிப்பருப்பு வேக வைக்க வேண்டும்:

முதலில் 1/2 கப் பாசிப்பருப்பை வேக வைத்து கொள்ளவும்.

ரவாவை வதக்க வேண்டும்:

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து ரவாவை பொன்னிறமாக வதக்கி எடுத்து கொள்ளவும்.

மிகவும் சுவையாக வெண்பொங்கல் செய்வது எப்படி?

 

மிளகு, சீரகம் பொறிப்பது:

ரவா பொங்கல் செய்வது எப்படி

அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி நெய் சூடானதும், சீரகம், மிளகு, ஒன்று இரண்டாக உடைத்த முந்திரி சேர்த்து வதக்கவும். அதன் பிறகு நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

ரவா பொங்கல் ரெடி:

அதனுடன் வேக வைத்த பருப்பு, 2 கப்  தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். ஒரு கொதி வந்த  பிறகு வதக்கி வைத்த ரவாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். அடிபிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும்.

ரவா பொங்கல் செய்வது எப்படி

தண்ணீர் இல்லாமல்  ரவா வெந்த பிறகு சிறிதளவு  நெய் ஊற்றி இறக்கி விடவும்.

கோவில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil