சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி தமிழில் | Sweet Pongal Recipe in Tamil
கோவில் சர்க்கரை பொங்கல் செய்முறை: சர்க்கரை பொங்கல் என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும். அதிலும் வீட்டில் செய்வதை விட கோவில் சர்க்கரை பொங்கல் என்றால் இரண்டு ஸ்பூன் அதிகமாக உள்ளே போகும் அல்லவா😄சிலருக்கு சர்க்கரை பொங்கல் வாயில் வைத்ததும் கரையும் வண்ணத்திற்கு டேஸ்டாக வைப்பார்கள். சிலருக்கு அந்த பதத்தில் வைக்க வராது. ஒரு சிலருக்கு சர்க்கரை பொங்கலானது கூலாக போய்விடும், ஒரு சிலருக்கு கெட்டியான தன்மையில் பொங்கலானது நீர்த்துபோய்விடும்.
வீட்டில் எந்த ஒரு சுப காரியத்திலும் வாழை இலையில் முதன்மை இடத்தில் படைப்பது இனிப்பு சார்ந்த இந்த சர்க்கரை பொங்கலை தான். கோவில் ஸ்டைல் தித்திப்பு சுவையூட்டும் சர்க்கரை பொங்கலை (sakkarai pongal recipe) வீட்டிலே நாமும் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
சர்க்கரை பொங்கல் – தேவையான பொருள்:
- பச்சரிசி – 1 கப்
- வெல்லம் – 2 கப்
- ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
- நெய் – 3 மேஜைக்கரண்டி/ தேவையான அளவு
- முந்திரிப் பருப்பு – தேவையான அளவு
- காய்ந்த திராட்சை – தேவையான அளவு
- பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை
சர்க்கரை பொங்கல் வைக்கும் முன் தெரிந்துக் கொள்ளுங்கள்:
- சர்க்கரை பொங்கலுக்கான சாதத்தை வேக வைக்கும் போது நன்றாக குழைந்து இருக்கும்படி வேக வைக்கவும்.
- ஒரு பங்கு பச்சரிசிக்கு ஒன்றரை பங்கு முதல் இரண்டரை பங்கு வரை வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
- வெல்ல பாகு காய்ச்சிய பிறகு அதனை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். ஏனென்றால் வெள்ளத்தில் சிறிய கற்கள் மற்றும் மண் இருக்க வாய்ப்புள்ளது.
- உங்களுடைய விருப்பத்திற்கேற்ப நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- பசு நெய் பயன்படுத்தும் பொழுது சுவையும் மணமும் அதிகமாக கிடைக்கும்.
- தவறாமல் 1 சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும், இது எல்லா மளிகை கடைகளிலும் கிடைக்கும்.
- பச்சை கற்பூரம் சேர்க்காமல் கோவில் சர்க்கரைப் பொங்கல் சுவையும் மணமும் வராது.
மிக சுவையான பொங்கல் சாம்பார் செய்வது எப்படி? |
சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி – செய்முறை விளக்கம்:
ஸ்டேப் 1: ஒரு அகலமான பேசனில் ஒரு கப் அளவிற்கு பச்சரிசியை எடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை நன்றாக இரண்டு முறை அலசிவிட்டு நான்கு கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
ஸ்டேப் 2: அடுத்து பிரஷர் குக்கரை மூடி வைத்து 4 விசில் வைத்துக்கொள்ளவும். இப்போது தனியாக ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்கு வெல்லத்தை சேர்க்கவும்.
ஸ்டேப் 3: தண்ணீரில் வெல்லம் மூழ்கும் அளவிற்கு நன்றாக கொதிக்க வைக்கவும். வெல்லம் கரைந்து கொதித்த பிறகு தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 4: வெல்லம் காய்ச்சி வைத்துள்ள பாத்திரத்தை இப்போது நன்றாக கழுவி வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகு சேர்த்துக் கொள்ளவும். அதனை ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
ஸ்டேப் 5: குக்கரில் விசில் வெளியானதும் குக்கரை திறந்து சாதத்தை நன்றாக இப்போது மசிக்கவும். மசித்த சாதத்தில் வெல்லப்பாகு சேர்க்கவும்.
ஸ்டேப் 6: அடுத்து சாதத்தை சேர்த்த பிறகு அரை தேக்கரண்டி அளவிற்கு ஏலக்காய் பொடியை அதில் சேர்க்கவும். தனியாக ஒரு சிறிய கடாயில் இரண்டு மேஜைக்கரண்டி அளவிற்கு நெய் இப்போது சேர்க்கவும்.
ஸ்டேப் 7: கடாயில் நெய் நன்றாக சூடான பிறகு தேவையான அளவிற்கு முந்திரிப்பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும். பின்னர் தேவையான அளவு காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் 8: இதனை சர்க்கரை பொங்கலில் சேர்த்து கலக்கவும். பின்னர் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கலக்கவும்.
ஸ்டேப் 9: இறுதியாக ஒரு சிட்டிகை அளவிற்கு பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து கொள்ளவும். கோவில் ஸ்டைல் டேஸ்டான சர்க்கரை பொங்கல் ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |