Samai Murukku Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் சமையல் பதிவில் வரும் தீபாவளிக்கு அருமையான சாமை முறுக்கு மிகவும் சுவையாக எப்படி செய்வது என்றுதான் தெரிந்து கொள்ளப்போகிறோம். நம் வீட்டில் எப்பொழுதும் தீபாவளி என்றால் பச்சை அரிசி மற்றும் புழுங்கல் அரிசி போன்றவற்றில் முறுக்கு செய்வார்கள். இந்த முறுக்கை சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு மிகவும் சுவையான சாமை முறுக்கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
சாமை அரிசி முறுக்கு செய்ய தேவைப்படும் பொருட்கள்:
- பச்சரிசி- 3/4 கிலோ
- சாமை அரிசி- 3/4 கிலோ
- பொட்டுக்கடலை- 1/2 கிலோ
- உளுத்தம் பருப்பு- 50 கிராம்
- எள் – 25 கிராம்
- நெய் – 100 ml
- எண்ணெய் – தேவையான அளவு
- பெருங்காயம்- 1/2 டீஸ்பூன்
- வரமிளகாய்- 25 கிராம்
- ஓமம்- 25 கிராம்
- உப்பு – தேவையான அளவு
சாமை அரிசி முறுக்கு செய்யும் முறை:
ஸ்டேப்:1
முதலில் ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் சாமை அரிசி மற்றும் பச்சரிசியை ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு அதனை நன்றாக அலசி நிழலில் காயவைத்து எடுக்க வேண்டும்.
ஸ்டேப்:2
ஒரு கடாயை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து நெய் விட வேண்டும். நெய் சூடானதும் அதில் உளுத்தம் பருப்பை கொஞ்சம் லேசாக வறுத்து எடுத்துக்கொண்டு தனியாக ஆறவிட்டு எடுக்க வேண்டும்.
ஸ்டேப்:3
அடுத்ததாக வறுத்த உளுத்தம் பருப்பு, சாமை அரிசி, பச்சரிசி, பொட்டுக்கடலை மற்றும் வர மிளகாய் சேர்த்து மிஷினில் அரைத்து மாவாக எடுத்து வர வேண்டும். அதன் பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த மாவு மற்றும் அதனுடன் சேர்த்து ஓமம், எள், உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
ஸ்டேப்:4
மாவை கலந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து பிசைந்து விட வேண்டும். முறுக்கு மாவு பதம் வரும் வரை மிகவும் கெட்டியாக இல்லாமலும், தண்ணியாக இல்லாமலும் இருக்கவேண்டும். கலந்த பிறகு மாவை 10 நிமிடம் வைக்கவேண்டும்.
ஸ்டேப்:5
ஒரு வாணலியில் எண்ணெய் தேவையான அளவு சேர்த்து முறுக்கு பிழியும் அச்சியில் மாவை சேர்த்து முறுக்கை பிழிந்து எடுக்க வேண்டும். இப்பொழுது மிகவும் சுவையான சாமை அரிசி முறுக்கு தீபாவளிக்கு தயார். எனவே இந்த சாமை முறுக்கை நீங்களும் செய்து தீபாவளிக்கு அசத்துங்கள்.
இந்த தீபாவளி கடலை மாவில் இப்படி ஒரு ரெசிபி பண்ணுங்க..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |