ஓரு கப் சேமியா இருந்தால் போதும் மிகவும் சுவையான ஸ்நாக்ஸ் செஞ்சி சாப்பிடலாம்..!

Advertisement

Semiya Snacks Recipe

வீட்டில் இருக்கும் பெண்கள் தன் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நீங்கள் புதிதாக ஏதும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சேமியா மட்டும் இருந்தால் போதும் மிகவும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம். வாங்க நண்பர்களே அந்த ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Semiya Snacks Recipe in Tmail:

  1. சேமியா – 1/2 கப்
  2. முட்டை – 1
  3. சர்க்கரை – 1/4 கப்
  4. ஏலக்காய் –
  5. கோதுமை மாவு – 1 கப்
  6. நெய் – 1 ஸ்பூன்
  7. எண்ணெய் – தேவையான அளவு
  8. உப்பு – சிறிதளவு
School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

செய்முறை -1

முதலில் ஒரு கிண்ணத்தில் 1/2 கப் அளவிற்கு சேமியா எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். பின் இதை நன்றாக கலந்து விட வேண்டும்.

செய்முறை -2

அடுத்து ஒரு மிக்சி ஜாரில் இதை சேர்த்து அதனுடன் 1/4 கப் அளவிற்கு சர்க்கரை, இரண்டு ஏலக்காய் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

செய்முறை -3

பின் அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதில் 1 கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கலந்து கொள்ள வேண்டும். பின் இதை சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும்.

கல்கத்தா ஸ்பெஷல் அண்டா ரோல் செய்வது எப்படி..?

செய்முறை -4

 

பின் அதை ஒரு சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டை போல செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் நாம் உருட்டி வைத்துள்ளதை போட்டு பொறிக்க வேண்டும்.

செய்முறை -5

பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து ஆறவிட்டு சாப்பிட வேண்டும். அவ்வளவு தான் நண்பர்களே மிகவும் சுவையான மொறுமொறு ஸ்நாக்ஸ் ரெடி..! நீங்களும் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள்..!

5 நிமிடத்தில் காலை உணவு ரெடி!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal
Advertisement