சிக்கன் 65 யை மிஞ்சிடும்.! சோயா 65

Advertisement

Soya 65 Recipe in Tamil

வணக்கம் நன்பர்களே இன்று நம் பதிவில் சிக்கன் 65 யை மிஞ்சிடும் அளவிற்கு சோயா 65 சுவையாகவும்  மொறுமொறுப்பாக செய்வது எப்படி என்று தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே சோயாவில் செய்யப்படும் பலவிதமான உணவு பொருள்களை சாப்பிட்டுருக்கின்றோம். அந்த வகையில் இந்த சோயா 65-ஐ குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் சூடாக சாப்பிட செய்து கொடுக்கலாம். மிகவும் எளிதாக சோயா 65 யை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி

 

தேவையான பொருட்கள்:

  • சோயா (மீல் மேக்கர்)
  • உப்பு
  • மஞ்சத்தூள் – சிறிதளவு
  • சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்
  • கரமசால் -1 ஸ்பூன் 
  • மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
  • இஞ்சுபூண்டு விழுது -1 ஸ்பூன்
  • அரிசிமாவு – 2 ஸ்பூன்
  • கடலை மாவு- கடலை மாவு
  • எலுமிச்சை பழம்- பாதி

சோயா 65 செய்முறை:

 சோயா 65

ஸ்டேப்:1

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு சேர்த்து சோயாவை  அடுப்பில் மீடியம் தீயில் வைத்து வேகவைத்து கொள்ளவேண்டும். 10 நிமிடம் கழித்து அந்த சோயாவை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொண்டு, அதை பச்சை தண்ணீரில் அலசிவிட்டு கையில் வைத்து, தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவேண்டும்.

ஸ்டேப்:2

அடுத்ததாக ஒரு கிண்ணத்தில் அந்த சோயாவை சேர்த்து அதில் மஞ்சத்தூள், கரமசாலா, சீரகத்தூள், மிளகாய்த்தூள், இஞ்சு பூண்டு விழுது, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு  போன்றவற்றை நன்றாக கலந்து கொள்ளவேண்டும். கடைசியாக எல்லா மசாலாவையும் கலந்த பிறகு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவேண்டும்.

ஸ்டேப்:3

சோயாவில் மசாலாவை கலக்கும் பொழுது மாவு ஒட்டாமல் இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். கலந்து வைத்த சோயாவை 10 நிமிசம் மூடி வைக்கவும்.

ஸ்டேப்:4

அடுத்தாக ஒரு கடாய் அல்லது நான்ஸ்டிக் பேன்னில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் கலந்து வைத்த சோயா மசாலாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, மிதமான சூட்டில் பொரித்து எடுத்து கொள்ளவேண்டும்.

ஸ்டேப்:5 

சோயா 65 செய்த பிறகு  அடைப்பை அனைத்து விட்டு அதில் 5 பச்சைமிளகையை பொரித்து கொண்டு, அதன் பிறகு தேவையான அளவு கருவேப்பிலை பொரித்து கொண்டு, சோயா 65 மேல் சேர்த்து கொள்ளவேண்டும், காரம் அதிகம் விரும்புவார்கள் அந்த மிளகாயுடன் சேர்த்து சாப்பிடலாம். இப்பொழுது சுவையான சோயா(மீல் மேக்கர்) 65 ரெடி வாங்க சுவைக்கலாம்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement