சுட்ட கத்திரிக்காய் குழம்பு ருசியாக செய்யலாம் வாங்க..!

Advertisement

சுட்ட கத்திரிக்காய் குழம்பு

கத்தரிக்காவை வைத்து குழம்பு என்றால் புளி குழம்பு மற்றும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தான் செய்திருப்போம். குழம்பு இல்லாமல் கத்தரிக்காவை வறுவல் மற்றும் பொரியல் செய்து சாப்பிட்டிருப்போம். இன்று வித்தியாசமாக கத்தரிக்காயை சமைப்போம். அது என்ன வித்தியாசமா சொல்ல போறீங்கன்னு நினைப்பீர்கள். இந்த புரட்டாசி மாதத்தில் சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு இந்த மாதிரி வித்தியாசமாக சுட்ட கத்திரிக்காய் குழம்பு செய்து கொடுக்கலாம். வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ ருசியான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி.?

சுட்ட கத்திரிக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  1. கத்திரிக்காய் – 6
  2. காய்ந்த மிளகாய் – 10
  3. நல்லெண்ணெய் – 3
  4. கடுகு – 1 தேக்கரண்டி
  5. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை – சிறிதளவு
  7. புளி – எலுமிச்சை அளவு
  8. வெல்லம் – சிறு துண்டு
  9. உப்பு – தேவையான அளவு

குழம்பு செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் கத்திரிக்காயை எடுத்து கொள்ளுங்கள். பின் அடுப்பு அல்லது கேஸ் பயன்படுத்தி முழு கத்தரிக்காயை அடுப்பின் தீயில் காட்டுங்கள். கத்திரிக்காய் நல்லா சூடு ஆகி தோல் உதிரும் பதம் வரைக்கும் அடுப்பின் தீயின் காட்டுங்கள்.

ஸ்டேப்:2

கத்தரிக்காயை எப்படி சுட்டு வைத்திருக்கீர்களோ அது போல காய்ந்த மிளகாயையும் சுட்டு எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:3

பிறகு சுட்ட கத்திரிக்காய் மற்றும் மிளகாயை அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:4

பின் அடுப்பை பற்ற வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு கடாயை வையுங்கள். பின் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு போடுங்கள். கடுகு வெடித்தவுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து சிவந்த நிறம் வரும் வரை வதக்குங்கள்.

ஸ்டேப்:5

பிறகு கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அரைத்த கத்திரிக்காயை சேர்க்கவும்.

ஸ்டேப்:6

பிறகு புளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

ஸ்டேப்:7

எண்ணெய் பிரிந்த நிலை வரும் போது சிறிதளவு வெல்லம் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

ஸ்டேப்:8

அவ்வளவு தாங்க சுட்ட கத்திரிக்காய் குழம்பு ரெடி..! சூடான சாதத்துடன் இந்த குழம்பை பரிமாறுங்கள்.!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement