Tirupati Devasthanam Puliyodharai Recipe in Tamil
நண்பர்களே யார் திருப்பதி சென்று உள்ளீர்கள். அங்கு கொடுக்கும் புளிச்சாதத்தை சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா..? பொதுவாக நம் வீட்டில் செய்யும் புளிசாதம் அந்த அளவிற்கு சுவையை அளிக்காது. அது நாம் எப்படி செய்தாலும் கோவிலில் தரும் புளிசாதம் போல் இருக்காது. அவர்கள் என்ன தான் சேர்ப்பார்கள் என்று தெரிந்தால் அதேபோல் நாமும் வீட்டில் செய்து பார்க்கலாம். சரி வாங்க திருப்பதியில் அளிக்கும் புளி சாதம் எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl
Tirupati Puliyodharai Recipe in Tamil:
இந்த புளிசாதம் செய்ய முதலில் பொடி அரைத்துக் கொள்ளவும். அதற்கு முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் 1.1/2 டீஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும். அதன் பின் அதில் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு அதே சூட்டில் 1 டீஸ்பூன் வெள்ளை எள் சேர்த்து வறுத்து மிக்சி ஜாரில் மாற்றிக் கொள்ளவும். அதனை பொடி போல் அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் தாராளமாக நல்ல எண்ணெய் சேர்த்து அதில் 1 ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன் சேர்த்து தாளித்து 1 கொத்து கருவேப்பிலை போட்டு, அதன் பின் 1 கைப்பிடி அளவு வேர்க்கடலை போட்டு வறுத்து சேர்த்துக்கொள்ளவும். அதன் கூடவே 1 கைப்பிடி அளவு முந்திரிப்பருப்பு சேர்த்து கொள்ளவும்.
இதையும் படியுங்கள்⇒ ஐயர் வீட்டு மோர் குழம்பு வீடே மணமணக்க செய்யலாம் வாங்க..!
அடுத்து கொய்யாப்பழம் அளவு புளி ஊறவைத்து கரைத்து அதனை அப்படியே கடாயில் ஊற்றி கூடவே வறுத்து அரைத்துவைத்துள்ள பொடி, கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
கொதித்து வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, அதில் 1 கொத்து கருவேப்பிலை போட்டு எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன் அதில் வடித்த சாதத்தை ஆறவைத்து புளிசாதம் கிளற வேண்டும். அப்போது தான் புளிசாதம் சூப்பராக இருக்கும்.
குறிப்பு: காரம் அதிகம் சாப்பிடுவீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அளவு மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.
இதையும் செய்து பாருங்கள் 👉👉👉 ஐயர் வீட்டு சுவையான இட்லி பொடி செய்வது எப்படி தெரியுமா..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |