வீட்டில் தினமும் இட்லி தோசையா அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Advertisement

வெங்காயம் சமையல்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் மூலம் இட்லி தோசைக்கு எப்படி சூப்பரான தொட்டுக்கையை செய்யலாம் என்று தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக எப்போதும் அந்த சட்னி, இந்த சட்னி என்று நிறைய விதமான சட்னியை செய்து வெறுத்து போகியிருப்பீர்கள். உங்களின் நிலைமையை அறிந்து இனி எப்போது ஒரே மாதிரியான சட்னிகளிருந்து விடுபட இந்த பதிவு உங்களுக்கு உதவி அளிக்கும் ..!

வெங்காயம் தொக்கு செய்வது எப்படி?

சின்ன வெங்காயம் – 1 கப்

பூண்டு – 2 பல்

புளி – 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் – 6

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

சட்னி வகைகள் ⇒ இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் 

ஸ்டேப் -1

முதலில் மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, புளி, வர மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -2

பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். ஊற்றிய நல்ல எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து அதனுடைய பச்சை தன்மை போகும் வரை 10 நிமிடம்  வதக்கிக்கொள்ளவும்.

பச்சை தன்மை போனபிறகு  அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின்பு இன்னொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து முன்பு பச்சை தன்மை போக வதக்கிய பேஸ்ட்டில் தாளித்த பொருட்களை சேர்த்து கிளறி விட்டால் சூப்பரான சின்ன வெங்காய தொக்கு ரெடி..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement