சொத்து மதிப்பில் அம்பானியை முந்திய கெளதம் அதானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Advertisement

கௌதம் அதானி சொத்து மதிப்பு – Adani Sothu Mathippu

நண்பர்களுக்கு வணக்கம்.. அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அண்மையில் முகேஷ் அம்பானியை முந்தி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக முன்னேறினார். ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் அதானி முதலிடத்தில் உள்ளார். உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் அதானி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பை பற்றி நாம் இப்பொழுது தெரிந்து கொள்வோம் வாங்க.

கௌதம் அதானி சொத்து மதிப்பு – Gautam Adani Net Worth in Tamil:

உலக பணக்காரர்கள் வரிசையில் 10-வந்து இடத்தில் இருந்த கௌதம் அதானி 4 இடங்கள் முன்னேறி இப்பொழுது 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஆசியா மற்றும் இந்தியாவின் மிக பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி, இரண்டாவது பெரும் பணக்காரர் கெளதம் அதானியும் பல ஆண்டுகளாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 9,810 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்றும் ஆசியாவின் மிக பெரிய பணக்காரராக கெளதம் அதானி உருவெடுத்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 9,240 கோடி அமெரிக்க டாலராக உள்ள நிலையில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் முகேஷ் அம்பானி.

உலக பணக்காரர்கள் வரிசையில் 6-வது இடத்தை பிடித்திட்டுள்ள கெளதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 4220 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தை தொடங்கியவரிகளில் ஒருவரான லாரி பேஜை உலக பணக்காரர்கள் வரிசையில் கெளதம் அதானி முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கௌதம் அதானி:

கௌதம் அதானி

கௌதம் அதானி ஜூன் 24,1962 ஆண்டு பிறந்தவர். இந்தியாவின் முதல் கோடீசுவர தொழில் அதிபர் ஆவார்.

இவர் அதானி குழுமம் மற்றும் அதானி அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவரும் ஆவார்.

பன்னாட்டுத் தொழிலதிபதிரான இவர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் பிறந்தவர்.

இவரது அதானி குழுமம், வேளாண்மை, பாதுகாப்புத் துறை, துறைமுகம், பெயர்ச்சியியல், எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement