எலோன் மஸ்க் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Elon Musk Net Worth  

பொதுவாக இன்றைய காலத்தை பொறுத்தவரை நம்முடைய தேவையினை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் அதற்கு கட்டாயமாக பணம் என்பது தான் மூலதனமாக இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் சிலர் விலையுயர்ந்த பொருளை வாங்கினாலோ அல்லது அனைவருடைய வீட்டிலும் இல்லாத ஒரு வித்தியாசமான பொருளை வாங்கினாலோ நாம் கூறும் வார்த்தை உனக்கு என்னப்பா உன்னிடம் சொத்து உள்ளது அதனால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் என்று தான் சொல்லுவோம். அதிலும் சிலர் அத்தகைய சொத்து மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்றும் கணிக்கிட்டு பார்ப்பார்கள். இதற்கு எதிர் மாறாக சிலர் உலகத்தில் அதிக சொத்துக்களுடன் நல்ல பெரும் புகழும் பெற்றிருக்கும் ஒரு நபரினை முன்னோடியாக வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று இருப்பார்கள். அந்த வகையில் பார்த்தோம் என்றால் இன்று நம் அனைவராலும் அதிகமாக பேசப்படும் எலோன் மஸ்க் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். எவ்வளவு சொத்து மதிப்பு என்று தெரிந்துக்கொள்ள பதிவை தொடர்ச்சியாக படித்து பாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…

எலோன் மஸ்க் சொத்து மதிப்பு எவ்வளவு:

 elon musk net worth in tamil

எலோன் மஸ்க் தற்போது நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக செயலியான Twitter மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனத்தில் CEO-ஆகா பணியாற்றி வருகிறார். மேலும் இவர் உலகில் காணப்படும் பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் எலோன் மஸ்க் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

மேலும் இவரின் சொத்து மதிப்பானது தோராயமாக 173 பில்லியன் டாலர் ஆகும். இதனை ரூபாய் கணக்கில் கூறும் போது இந்த சொத்து மதிப்பு 15.5 டி கோடிகளாக உள்ளது. மேலும் இந்த சொத்து மதிப்பானது முன்பை விட இப்போது சரிவினை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

 மேலும் சில தகவல்கள் இதோ:

1971-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஜனவரி மாதம் 28-ஆம் தேதி பிறந்தார். அதுபோல இவருக்கு இளம் வயதிலேயே தொழில்நுட்ப வசதியின் மீது அதிக ஆர்வம் இருந்து வந்தது. ஆகையால் மஸ்க் அவரது 12-ஆம் வயதில் ஒரு Vedio Game-ஐ உருவாக்கி அதன் மூலம் வெற்றியினை அடைந்தார்.

இத்தகைய ஆர்வத்தினை செயல்படுத்தும் விதமாக Zip2 என்ற மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தினை தொடங்கி அதில் செயல்பட தொடங்கினார்.

மேலும் இந்த முயற்சி கடைசி வரை நீடிக்காத காரணத்தினால் அதற்கு அடுத்தகட்டமாக 2004 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கினார். தற்போது அதே நிறுவனத்தில் CEO ஆகவும் பணியாற்றி வருகிறார்.

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 சொத்து-மதிப்பு
Advertisement