The Net Worth Of Rishi Sunak in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் என்பவரின் சொத்து மதிப்பு பற்றி தான் பார்க்க போகிறோம். இவர் 1980 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிறந்தார். இவர் ஐக்கிய ராஜ்யத்தின் அரசியல்வாதி என்று செல்லப்படுகிறார். இவர் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 1960 ஆம் ஆண்டு குடியேறிய யாஷ்விர் சுனக் மற்றும் உஷா சுனக் என்ற தம்பதிக்கு மூத்தமகனாக பிறந்தார். இப்போது ரிஷி சுனக் சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? இன்று இந்த பதிவின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இதையும் பாருங்க –> மூன்றாம் சார்லஸ் மன்னரின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?
பிரதமர் ரிஷி சுனக் என்பவரின் சொத்து மதிப்பு எவ்வளவு..?
ரிஷி சுனக் என்பவர் 2015 -ல் மக்களவையில் ஓர் உறுப்பினராகவும் அதேபோல 4 முக்கிய துறைகளில் ஒன்றான கருவூலத்துறையின் தலைவராகவும் இருந்து வந்தார்.
இவர் தற்போது 2022 அக்டோபர் 24 முதல் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், அக்டோபர் 25 முதல் ஐக்கிய இராஜ்யத்தின் பிரதமராகவும் பதவி ஏற்றுள்ளார்.
ரிஷி சுனக் அட்சதா மூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அட்சதா மூர்த்தி என்பவர் இந்தியத் தொழில் அதிபரும், இன்போசிசு நிறுவனருமான நா.ரா. நாராயணமூர்த்தியின் மகள் ஆவார்.
இவரும் இவர் மனைவி அட்சதா மூர்த்தியும் ஐக்கிய ராஜ்யத்தில் மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பில் அம்பானியை முந்திய கெளதம் அதானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? |
இவர் 1989 ஆம் ஆண்டில் இருந்தே பணக்காரர் பட்டியலில் இடம் பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது. இவருக்கு 15 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள நான்கு வீடுகள், அதேபோல இவருக்கு யார்க்ஷயரில் ஒரு வீடு மற்றும் சில வீடுகள் வெளிநாடுகளிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடக்கின்றன.
ரிஷி சுனக் தனது வாழ்க்கையில் நல்ல பதவிகளில் இருந்து நல்ல வருமானத்தை பெற்றிருந்தாலும், 2009 ஆம் ஆண்டு அட்சதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்ட பின்னரே அவருடைய சொத்து மதிப்பு அதிகரித்தது என்று சொல்லப்படுகிறது.
ஏனென்றால், அட்சதா மூர்த்தியின் தந்தை நாராயண மூர்த்தி இந்தியாவின் ஆறாவது பணக்காரர் ஆவார். நாராயண மூர்த்தியின் வணிகத்தில் அவரது வாரிசான அட்சதாவுக்கு பெரிய பங்குகள் உள்ளன. மேலும் அவர் அட்சதா டிசைன்ஸ் என்ற ஃபேஷன் லேபிள் உரிமையாளராகவும் இருக்கிறார்.
தற்போது பணக்காரர்கள் பட்டியலில் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அட்சதா மூர்த்தி ஆகியோரின் சொத்து மதிப்பு 730 மில்லியன் பவுண்டுகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.இதையும் கிளிக் செய்து பாருங்கள்–> முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |