இன்னா நாற்பது நூல் குறிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Inna Narpathu Nool in Tamil..! 

வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் நம் தமிழ் மொழியில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இன்னா நாற்பது நூல் குறிப்பு பற்றி தான் பார்க்க போகிறோம். சிவபெருமான் பற்றிய பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இன்னா நாற்பது நூல் பற்றிய தகவல்களையும், இந்த நூலை இயற்றியவரின் வரலாற்றை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ திருமுருகாற்றுப்படை நூல் குறிப்பு

இன்னா நாற்பது நூல் குறிப்பு:

இன்னா நாற்பது  நூலை கபிலர் என்னும் தமிழ் புலவர் இயற்றியுள்ளார். இந்நூல் 41 பாடல்களை கொண்டுள்ளது. இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஓன்று. இது சங்கம் மருவிய நூல் என்றும் கூறப்படுகிறது. இன்னா நாற்பது கி.பி. நான்காம் நூற்றாண்டை சேர்ந்த நூல் என்று கூறப்படுகிறது.

இந்த இன்னா நாற்பது இன்னிசை வெண்பாக்களால் ஆன நூல் ஆகும். இந்நூல் அறப்பொருள் பற்றி கூறப்படுகிறது. இந்நூலில் 40 கடவுள் வாழ்த்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் அறம் பற்றிய நூலாகும்.

இந்நூல் ஒவ்வொரு பாடல்களிலும் நான்கு கருத்துக்களை கொண்டு, ஒவ்வொன்றையும் இன்னா என்று எடுத்து கூறுவதால் இந்நூல் இன்னா நாற்பது என பெயர்பெற்றது.

இந்நூலில் வரும் கடவுள் வாழ்த்து பாடல்களில் சிவபெருமான், முருகன், பலராமன், திருமால், போன்ற கடவுள்கள் பற்றி பாடப்பட்டுள்ளது. இந்நூலில் 164 இன்னா செயல்கள் கூறப்பட்டுள்ளன.

இந்த இன்னா நாற்பது நூல்கள் இரட்டை அறநூல்கள் என்றும் கூறப்படுகின்றன. ‘இன்னா’ என்பதன் பொருள் துன்பம்.  இந்நூலில் மொத்தம் எட்டு வனப்புகள் இடம் பெறுகின்றன.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ பாரதியாரின் பாஞ்சாலி சபதம் நூல்

இன்னா நாற்பது நூலில் இடம்பெறும் வனப்புகள்:

  1. அம்மை
  2. அழகு
  3. தொன்மை
  4. தோல்
  5. விருந்து
  6. இயைபு
  7. புலன்
  8. இழைபு

இன்னா நாற்பது ஆசிரியர் குறிப்பு:

இந்த நூலை கபில தேவர் என்னும் தமிழ் புலவர் இயற்றியுள்ளார். இவர் மதுரை மாவட்டத்தில் திருவாதவூர் என்ற இடத்தில் பிறந்தார். இவருக்கு குறிஞ்சி பாடிய கபிலர் என்னும் வேறு பெயரும் உண்டு. இவர் சங்ககால இலக்கிய நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார். இவர் சைவ புலவர் ஆவர். இவர் இன்னா நாற்பது என்னும் நூலை இயற்றியுள்ளார்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement