Ilakkanam Endral Enna?
தமிழ் பயிலும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது அன்பான வணக்கம். இந்த பதிவில் இலக்கணம் என்றால் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். இலக்கணம் என்பது ஒரு மொழியின் விதிகளையும் கூறுகளையும் விளக்குவதாகும். மேலும், ஒரு மொழியின் வரையறை என்று கூறினால் மிகையாகாது. தமிழ் இலக்கணம் ஐந்து பிரிவுகளைக் கொண்டது. சரி இலக்கணம் என்றால் என்ன? என்பதை பற்றி விரிவாக படித்தறியலாம் வாங்க.
இலக்கணம் என்றால் என்ன?
Ilakkanam Endral Enna?: இலக்கணம் என்பது ஒரு மொழியின் இலக்கணக் கட்டமைப்பைப் பிழையில்லாமல் கற்றுக்கொள்வதற்கு தேவையான விதிகளின் தொகுப்பு, இந்த இலக்கண கட்டமைப்பை வரையறுக்கும் விதிகளின் தொகுப்பு என்பது எழுத்து மற்றும் சொல் ஆகும். இது எல்லா மொழிகளிலும் உள்ள பொதுவான இலக்கண விதிகள் ஆகும்.
தமிழ் மொழியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்து இலக்கண வகைகள் உள்ளன.
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? |
எழுத்து இலக்கணம்:
தமிழ் மொழியின் எழுத்து இலக்கணத்தில் தமிழ் எழுத்துகளின் வகைகள், அவை ஒலிக்கும் கால அளவு, எழுத்துகள் பிறக்கும் முறை முதலியனவும் சந்தி இலக்கணமும் இடம்பெற்றுள்ளன.
சொல் இலக்கணம்:
தமிழ் மொழியின் சொல் இலக்கணத்தில், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய சொல்லின் வகைகளும் திணை, பால், எண், இடம், காலம் ஆகியனவும் தொகை (எழுத்துகள் மறைந்து வருதல்), வேற்றுமை என்பனவும் விவரிக்கப்பட்டிருக்கும்.
சொல் என்றால் என்ன? |
பொருள் இலக்கணம்:
தமிழ் மொழிக்கே சிறப்பாக உரிய இலக்கணம் பொருள் இலக்கணம் ஆகும். சங்ககாலத்தில் இயற்றப்பட்ட எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகிய தொகை இலக்கியங்களுக்காக எழுதப்பட்ட இலக்கணம் பொருள் இலக்கணம் ஆகும். இவை அகப்பொருள் என்னும் காதல், காமம் பற்றியும் புறப்பொருள் என்னும் போர், வீரம், இரக்கம், நிலையாமை, கொடை, கல்வி பொருள்கள் பற்றிப் பேசுவனவாகும்.
யாப்பு இலக்கணம்:
தமிழ் யாப்பு இலக்கணம் செய்யுள் இயற்றுவதற்குரிய விதிகளையும், விதிவிலக்குகளையும் கூறுகிறது. அவை
1. எழுத்து
2.அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை என ஆறு வகைகளை ‘யாப்பிலக்கணம்’ கூறுகிறது..
அதாவது செய்யுள்களின் அமைப்பு, ஓசை, பாக்களின் வகைகள் ஆகியவற்றைச் சொல்கிறது.
அணி இலக்கணம்:
தமிழ் அணி இலக்கணம் உவமை, உருவகம் ஆகியவற்றுக்கு அணி என்று பெயரிடப்பட்டு இவற்றின் இலக்கணத்தைச் சொல்கிறது. அணி என்றால் அழகு என்று பொருள். தொல்காப்பியம், வீரசோழியம், மாறனலங்காரம் ஆகிய அணி இலக்கண நூல்கள் உள்ளன.
தொல்காப்பியம் வரலாறு |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |