உயில் எழுதுவது எப்படி? | Uyil Eluthuvathu Eppadi

Uyil Eluthuvathu Eppadi

உயில் எழுதி வைப்பது எப்படி? | Uyil Format in Tamil

வணக்கம் பொதுநலம் வாசகர்களே.. இந்த பதிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் உயில் என்றால் என்ன? உயில் எப்படி எழுதுவது என்பதை பற்றி படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். உயில் என்பது உறவு முறைகளை பாதுகாத்து கொள்வதற்கான கவசம் தான். உயில் என்று சொல்லக்கூடியது சொத்தினை பிரிப்பதற்கும், சொத்து பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு மட்டும் எழுதப்படும் ஆவணம்இல்லை. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளிருக்கும் உணர்வுகளை வெளிக்கூறும் சாதனம் அது! வாங்க உயில் பற்றி விரிவாக படித்தறிவோம்.

கடன் பத்திரம் எழுதுவது எப்படி?

உயில் என்றால் என்ன:

தம்மிடம் இருக்கும் சொத்தை தன்னுடைய இறப்பிற்கு பின் அதை யார் உரிமை கொண்டு அனுபவிக்கலாம் என்று தனது விருப்பத்தை எழுத்து வடிவில் எழுதுவது தான் உயில் சாசனம் என்பதாகும்.

இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் பிற்காலத்தில் சொத்துக்காக யாரும்  சண்டை போட்டு கொள்ளக்கூடாது. அதனால், முறையாக ஒவ்வொருவரும் உயில் எழுதி கட்டாயம் வையுங்கள்..!

உயில் எழுதுவது எப்படி?

உயில் எழுதுவது அப்படி ஒன்றும் பெரிய விஷயமில்லை. சொத்துக்கான உயிலை நாம் முத்திரை பதித்த பேப்பரில் தான் எழுத வேண்டும் என்று அவசியமில்லை. சாதாரணமாக வெள்ளை பேப்பரில் கூட சொத்து உயில் எழுதலாம்.

இந்த மொழியில் தான் எழுதவேண்டும் என்று எந்த ஆட்சேபனையும் இல்லை. எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்பு தான் எழுதவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

உயில் எழுதும் போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத் தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். உயில் எழுதும் பேப்பரின் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து கட்டாயம் இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்கள் இருக்கும் நிரந்தர முகவரியை உயிலில் எழுத வேண்டும்.

உயில் எழுதும் போது சொத்துகள் பற்றிய முழுமையான விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக உயிலில் சொத்தின் வாரிசு யார் என்று விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு எதனால் சொத்தினை எழுதி வைக்கிறீர்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்’’.

‘‘சொத்து பற்றிய விவரங்களை உயிலில் எழுதும் போது, சொத்து இப்போது எங்கு இருக்கிறது, சொத்து எவ்வளவு பரப்பு என்ற முழு விவரத்தையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்களைத் தெரிவிக்கும் போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் அதில் சொல்ல வேண்டும்’’.

உயிலானது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில்.

முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.

உயில் மூலம் நமக்கு கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி எதுவும் இல்லை.

காவல்துறை புகார் கடிதம் மாதிரி
மின்சாரம் புகார் கடிதம் மாதிரி

உயில் எப்போது செல்லுபடி ஆகாது:

மது அருந்திவிட்டு எழுதிய உயில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.

உயில் சாட்சி:

உயிலில் குறிப்பிட்ட விஷயத்தினை நிறைவேற்றினால் மட்டுமே உயில் செல்லு படியாகும்.

கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன.

சலுகை உயிலுக்கு சாட்சி கையெழுத்தாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதுமானது.

உயில் பற்றிய மேலும் தகவல்:

  1. ஒருவர் எத்தனை உயில் வேண்டுமானாலும் எழுதலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதப்பட்டதோ அந்த உயிலே செல்லுபடியாகும். அதற்கு எழுதிய தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.
  2. ஒரு நபர் தான் கையால் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் மாற்றி மீண்டும் எழுத முடியும்.
  3. கையால் எழுதும் நிலை மாறி இப்போது இன்டர்நெட் மூலம் உயில் எழுதும் வசதி வந்துவிட்டது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil