உருவகம் என்றால் என்ன? | Uruvagam Endral Enna

Uruvagam Endral Enna

உருவகம் என்றால் என்ன தமிழில் | Uruvagam Definition in Tamil

உருவகம் என்றால் என்ன: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் உருவக அணி என்றால் என்ன என்பதை பார்க்கலாம். அணி என்பதற்கு அழகு என்று பொருள். இந்த அணி இலக்கணத்தில் சொல்லணி, பொருளணி என இரண்டு வகைகள் உள்ளது. இவற்றில் பொருளணியில் உவமை அணி, உருவக அணி முதலாக 35 அணிகள் உள்ளது. நாம் இந்த தொகுப்பில் உருவக அணி என்றால் என்ன? அதற்கான சில எடுத்துகாட்டுகளையும் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உருவகம் என்றால் என்ன?

  • Uruvagam Endral Enna in Tamil: உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும், உவமிக்கப்படும் பொருளுக்கும் இடையேயான வேறுபாட்டை நீக்கி அவை இரண்டும் ஒன்றே என்னும் உள்ளுணர்வு தோன்றுமாறு ஒற்றுமைப்படுத்தி கூறுவது உருவகம் எனப்படும்.

உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்று என
மாட்டின் அஃது உருவகம் ஆகும்.

  • உவமை அணியில் உவமானம் முன்னும், உவமையம் பின்னும் வரும். உருவக அணியில் உவமையம் முன்னும், உவமானம் பின்னும் வரும்.

உதாரணம்:

  • உவமை அணி – மதி முகம் (மதி போன்ற முகம்)

விளக்கம்: உவமை அணியில் மதி போன்ற முகம் என்று கூறியதால் இது உவமை அணி ஆயிற்று.

  • உருவக அணி – முகமதி  (முகம் தான் மதி) 

விளக்கம்: உருவக அணியில் அவள் முகம் தான் மதி என்று கூறியதால் இது உவமை அணி ஆயிற்று.

எடுத்துக்காட்டுகள்:

உவமை அணி – புலி போன்ற வீரன் வந்தான்
உருவக அணி – புலி வந்தான்

உவமை அணி – மலர்க்கை (மலர் போன்ற கை)
உருவக அணி – கைமலர் (கைகள்தான் மலர்)

உவமை அணி – வேல்விழி (வேல் போன்ற விழி)
உருவக அணி – விழிவேல் (விழிதான் வேல்)

உவமை அணி – மலர் கண் (மலர் போன்ற கண்)
உருவக அணி – கண்மலர் (கண் ஆகிய மலர்)

வகைகள்:

உருவக அணி 15 வகைப்படும் அவை:

  1. தொகை உருவகம்
  2. விரி உருவகம்
  3. தொகைவிரி உருவகம்
  4. இயைபு உருவகம்
  5. இயைபிலி உருவகம்
  6. வியனிலை உருவகம்
  7. சிறப்பு உருவகம்
  8. விரூபக உருவகம்
  9. சமாதான உருவகம்
  10. உருவக உருவகம்
  11. ஏகதேச உருவகம்
  12. அநேகாங்க உருவகம்
  13. முற்று உருவகம்
  14. அவயவ உருவகம்
  15. அவயவி உருவகம்

தொகை உருவகம்:

Uruvagam Definition in Tamil: உருவக உருபு “ஆகிய” எனும் சொல் பாடலில் மறைந்து வருவது தொகை உருவகம் எனப்படும். அதாவது இவற்றில் இணைப்பு சொல் எதுவும் இருக்காது.

அங்கை மலரும் அடித்தளிரும் கண்வண்டும்
கொங்கை முகிழும் குழல்காரும் – தங்கியதோர்
மாதர்க் கொடி உளதால் நண்பா! அதற்கு எழுந்த
காதற்கு உளதோ கரை.

இந்த பாடலில் அங்கை ஆகிய மலர் எனும் சொல்லில் “ஆகிய” எனும் உருபு மறைந்து “அங்கை மலரும்” என வந்துள்ளது.

விரி உருவகம்:

பாடலில் ஆகிய, ஆக எனும் உருபுகள் வெளிப்படையாக வருவது விரி உருபுகள் எனப்படும்.

கொங்கை முகையாக மென்மருங்குல் கொம்பாக
அங்கை மலரா அடி தளிரா – திங்கள்
அளிநின்ற மூரல் அணங்காம் எனக்கு
வெளிநின்ற வேனில் திரு

முகையாக, கொம்பாக, மலரா, தளிரா என்று ஆக, ஆ என்று உருபுகள் வெளிப்படையாக இருப்பதால் இது விரி உருவகம் எனப்படும்.

இயைபு உருவகம்:

பாடலில் உள்ள பல பொருள்களை உருவகம் செய்யும் பொழுது அவற்றை ஒன்றோடு ஒன்று பொருத்தம் உடைய பொருள்களாக வைத்துக் கூறுவது இயைபு உருவகம் எனப்படும்.

செவ்வாய்த் தளிரும் நகைமுகிழும் கண்மலரும்
மைவார் அளக மதுகரமும் – செவ்வி
உடைத்தாம் திருமுகம் என் உள்ளத்து வைத்தார்
துடைத்தாரே அன்றோ துயர்

இந்த பாடலில் வாய் தளிராகவும், புன்முறுவல் முல்லை அரும்பாகவும் உள்ளது. உருவகம் செய்த தளிர், முகிழ் போன்ற பொருட்கள் ஒன்றோடு ஒன்று பொருத்தம் உடைய பொருள்களாக வைத்துக் கூறுவதனால் இது இயைபு உருவகம் எனப்படும்.

இயைபு இல் உருவகம்:

பாடலில் உள்ள பொருளை ஒன்றோடு ஒன்று இயைபு இல்லாத பொருளாக வைத்து கூறுவது இயைபு இல் உருவகம் எனப்படும்.

தேன் நக்கு அலர்கொன்றை பொன்னாக,
செஞ்சடையே கூனல் பவளக் கொடியாக, – தானம்
மழையாக, கோடு மதியாகத் தோன்றும்
புழையார் தடக்கைப் பொருப்பு

இதில் விநாயகர் அணிந்துள்ள கொன்றை மாலை, செஞ்சடை, மதநீர், தந்தம் போன்ற உருவகத்திற்கு கையாண்டமலை, பொன், பவளக்கொடி, மழை, பிறை போன்றவற்றை இயைபு இல்லாத பொருளை கொண்டு உருவகம் செய்ததால் இது  இயைபு இல் உருவகமாயிற்று.

ஏகதேச உருவகம்:

இதில் உருவகம் செய்ய வேண்டிய இரண்டு பொருள்களில் ஒன்றை உருவகம் செய்து விட்டு, மற்றொன்றை உருவகம் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவது ஏகதேச உருவகம் எனப்படும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இந்த குறட்பாவில் பிறவி மற்றும் இறைவன் திருவடியை உருவகம் செய்ய வேண்டும், ஆனால் இதில் பிறவியை கடலாக உருவகம் செய்து விட்டு, இறைவனின் திருவடியை உருவகம் செய்யாமல் தெப்பமாக விட்டுவிட்டதால் இது ஏகதேச உருவக அணியாகும்.

உவமை அணி விளக்கம்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil