7 தலைமுறை பெயர்கள்..!

parambarai meaning in tamil

ஏழு தலைமுறைகள் பெயர்

நாம் வீட்டில் பேசும் போது இந்த வார்த்தையை கேட்டிருப்போம். அப்படி என்ன வார்த்தை என்று தானே யோசிக்கிறீர்கள். உங்கள் அப்பாவோ அம்மாவோ அல்லது உங்களின் தாத்தா பாட்டியோ யாராவது பேசும் வார்த்தை தான் இது. அவர்களின் யாராவது வந்து நீங்கள் எவ்வளவு நாட்கள் இங்கு வாழ்கிறீர்கள் என்றால், அவர்கள் உடனே சொல்வது நாங்கள் இங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம் என்றும் அல்லது தலைமுறை தலைமுறையாக வாழ்கிறோம் என்றும் சொல்வார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? அல்லது தலைமுறைக்கும் பரம்பரைக்கு என்ற வித்தியாசம் என்று தெரியுமா? தெரியவில்லை என்றால் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

ஏழு தலைமுறைகள் பெயர்:

தலை முறை என்றால் அது 7 தலைமுறை தான். அதை தான் தலை நாம் முறை என்று சொல்வோம். இப்போது உங்களுக்கு கேள்வி இருக்கும் யாரை தலை முறை என்று சொல்வோம் என்று. சரி தான் வாங்க அதனை தெரிந்து கொள்ளலாம்.

நாம் இருக்கும் தலைமுறை  முதல் தலைமுறை 
தாய், தந்தை  இரண்டாம் தலைமுறை 
பாட்டன், பாட்டி  மூன்றாம் தலைமுறை 
பூட்டன், பூட்டி  நான்காம் தலைமுறை 
ஒட்டன், ஒட்டி  ஐந்தாம் தலைமுறை 
சேயோன், சேயோள்  ஆறாம் தலைமுறை 
பரன், பரை  ஏழாம் தலைமுறை 

 

உறவுமுறை பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

பரம்பரை என்றால் என்ன?

பரன் + பரை என்பது தான் பரம்பரையாகும். அதேபோல் 7 தலைமுறைக்கு பெயர் தான் பரம்பரை ஆகும். ஆகவே 7 தலைமுறைக்கு மேல் வாழ்வதால் அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  “நாங்க எல்லாம் கவரிமான் பரம்பரை” இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 “கோத்திரம் அறிந்து பெண் கொடு பாத்திரம் அறிந்து பிச்சை இடு” பழமொழியின் உண்மை காரணம்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil