ஐவகை நிலங்கள் | Ivagai Nilangal in Tamil

Ivagai Nilangal in Tamil

ஐவகை நிலங்கள் தெய்வம் | 5 Vagai Nilam in Tamil

Ivagai Nilangal in Tamil | ஐவகை நிலங்கள்: சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டு மக்கள் வாழ்ந்து வந்த நிலத்தினை 5 வகையாக பிரித்தனர். அந்த 5 வகை நிலங்களானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரிக்கப்பட்டுள்ளது. ஐந்து வகை நிலங்களுக்கும் தனித்தனியாக தெய்வம், தொழில், உணவு, மரம், பூ, பறவை, விலங்கு போன்றவை தனியாக உள்ளது. குறிஞ்சி நிலத்தினை மலையும் மலை சார்ந்த பகுதி என்று அழைத்தனர். மலைக்கு அடுத்து இருந்த நிலப்பகுதி காடும், காட்டைச் சார்ந்த இடப்பகுதியை முல்லை நிலம் என்றுஅழைத்து வந்தனர். முல்லைக்கு அடுத்து இருந்த வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்று குறிப்பிட்டனர். கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம்என்று கூறினார்கள். மழை பெய்யாமல் நிலம் வரண்டு இருக்குமானால் அப்பகுதியைப் பாலை என்று கூறினார்கள். இந்த பதிவில் ஒவ்வொரு நிலத்திற்கும் (ivagai nilangal) உரிய தெய்வம், தொழில், உணவு, மரம், பூ, பறவை, விலங்கு போன்றவற்றை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

கல்வி தொலைக்காட்சி அட்டவணை

ஐவகை நிலங்கள் அட்டவணை:

ஐவகை நிலங்கள் மக்கள்:

நிலம்  மக்கள் 
குறிஞ்சி குறவன், குறத்தியர்
முல்லை ஆயர், ஆய்ச்சியர்
மருதம் உழவர், உழத்தியர்
நெய்தல் பரதர், பரத்தியர்
பாலை எய்னர், எயிற்றியர்

ஐவகை நிலங்கள் உணவு:

நிலம்  உணவு 
குறிஞ்சி தினை, மலை நெல்
முல்லை வரகு, சாமை
மருதம் செந்நெல், வெண்ணெய்
நெய்தல் மீன்
பாலை சூறையாடலால் வரும் பொருள்

ஐவகை நிலங்கள் விலங்கு:

நிலம்  விலங்கு 
குறிஞ்சி புலி, கரடி, சிங்கம்
முல்லை முயல், மான்
மருதம் எருமை, நீர்நாய்
நெய்தல் முதலை, சுறா
பாலை வலிமை இழந்த யானை

ஐவகை நிலங்கள் பூ:

நிலம்  பூ 
குறிஞ்சி குறிஞ்சி, காந்தள்
முல்லை முல்லை, தோன்றி
மருதம் செங்கழுநீர், தாமரை
நெய்தல் தாழை, நெய்தல்
பாலை குரவம், பாதிரி

ஐவகை நிலங்கள் மரம்:

நிலம்  மரம் 
குறிஞ்சி அகில், வேங்கை
முல்லை கொன்றை, காயா
மருதம் காஞ்சி, மருதம்
நெய்தல் புன்னை, ஞாழல்
பாலை இலுப்பை, பாலை

ஐவகை நிலங்கள் பறவை:

நிலம்  பறவை 
குறிஞ்சி கிளி, மயில்
முல்லை காட்டுக்கோழி, மயில்
மருதம் நாரை, நீர்க்கோழி, அன்னம்
நெய்தல் கடற்காகம்
பாலை புறா, பருந்து

 

ரயில்வே டைம் அட்டவணை 

ஐவகை நிலங்கள் ஊர்:

நிலம்  ஊர் 
குறிஞ்சி சிறுகுடி
முல்லை பாடி, சேரி
மருதம் பேரூர், மூதூர்
நெய்தல் பட்டினம், பாக்கம்
பாலை குறும்பு

ஐவகை நிலங்கள் நீர்:

நிலம்  நீர் 
குறிஞ்சி அருவி நீர், சுனை நீர்
முல்லை காட்டாறு
மருதம் மனைக்கிணறு, பொய்கை
நெய்தல் மணற்கிணறு, உவர்க்கழி
பாலை வற்றிய சுனை, கிணறு

ஐவகை நிலங்கள் பறை:

நிலம்  பறை
குறிஞ்சி தொண்டகப் பறை
முல்லை ஏறுகோட்
மருதம் மணமுழா, நெல்லரிகிணை
நெய்தல் மீன்கோட்பறை
பாலை துடி

ஐவகை நிலங்கள் யாழ்:

நிலம்  யாழ் 
குறிஞ்சி குறிஞ்சியாழ்
முல்லை முல்லையாழ்
மருதம் மருதயாழ்
நெய்தல் விளரியாழ்
பாலை பாலையாழ்

ஐவகை நிலங்கள் பண்:

நிலம்  பண் 
குறிஞ்சி குறிஞ்சிப்பண்
முல்லை முல்லைப்பண்
மருதம் மருதப்பண்
நெய்தல் செவ்வழிப்பண்
பாலை பஞ்சுரப்பண்

ஐவகை நிலங்கள் தொழில்:

நிலம்  தொழில் 
குறிஞ்சி தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்
முல்லை ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்
மருதம் நெல்லரிதல், களைபறித்தல்
நெய்தல் மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்
பாலை  வழிப்பறி செய்தல்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil