சீவக சிந்தாமணி நூல் குறிப்பு | Seevaga Chinthamani in Tamil

Seevaga Sinthamani

சீவக சிந்தாமணி பற்றிய சில குறிப்புகள் | Seevaga Sinthamani

Seevaga Chinthamani in Tamil: காப்பியங்களில் ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், சைவ காப்பியங்கள், சமண காப்பியங்கள் என்று பல காப்பியங்கள் உள்ளன. ஒவ்வொரு காப்பியமும் தனித்தனி சிறப்புகளை பெற்றுள்ளது. காப்பியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஐம்பெருங்காப்பியம் ஆகும். அப்படி சிறப்பு வாய்ந்த ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவக சிந்தாமனி. நாம் இப்பொழுது சீவக சிந்தாமணி பற்றிய சில குறிப்புகளை இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சீவக சிந்தாமணி நூல் குறிப்பு

ஆசிரியர் குறிப்பு – Seevaga Sinthamani

 • சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி எனும் ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையானது சீவக சிந்தாமணி. இந்த நூலின் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவர். இவர் சமண சமயத்தை சார்ந்தவர். சோழருடைய காலத்தில் வாழ்ந்தவர், கி.பி 9-ம் நூற்றாண்டை சார்ந்தவர்.

ஆசிரியர் சிறப்பு – சீவக சிந்தாமணி:

 • சமண துறவியான திருத்தக்க தேவர் அறம் போற்றப்படும் கருத்துக்களை மட்டும் சொல்லாமல் இல்லற வாழ்க்கை பற்றிய கருத்துக்களையும் மிக அழகாக இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர் என்பது இவருடைய சிறப்பு பெயர்கள் ஆகும்.
 • கல்வியில் மீது உள்ள ஆர்வத்தால் படிப்பில் சிறந்து விளங்கினார். வட மொழியை நன்கு கற்று தேர்ந்தவர். விருத்தப்பாக்களால் பெருங்காப்பியங்களை பாடிய பல புலவர்களில் இவர் சிறப்பு மிக்கவர் மற்றும் முதன்மையானவர்.

சீவக சிந்தாமணி கதை சுருக்கம்

சீவக சிந்தாமணி கதை சுருக்கம் – Seevaga Chinthamani in Tamil:

 • இந்த நூல் சீவகன் என்பவனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு அமைந்தது.
 • சீவகனின் பெற்றோர் சச்சந்தன் மற்றும் விசையை என்பவர் ஆவார்.
 • கட்டியங்காரன் எனும் அமைச்சர் ஏமாங்கத நாட்டை கைப்பற்றுவதற்காக சீவகனின் தந்தை கச்சந்தனை கொன்று விடுகிறார். பின் சீவகன் கந்துக்கடன் எனும் வணிகனிடம் வளர்கிறான். அச்சணந்தி எனும் ஆசிரியரிடம் இவர் கல்வி பயில்கிறார். பல கலைகளில் சிறந்து விளங்கியும், நல்ல அறிவு உடையவனாகவும், சிறந்த வீரனாகவும் திகழ்கிறான்.
 • பல கலைகளிலும் சிறந்து விளங்கிய சீவகன் பருவம் அடைந்த பிறகு ஏமாங்கத நாட்டை கைப்பற்றுவதற்காக தாயின் அறிவுறை மற்றும் கோவிந்தன் எனும் தாய்மாமனின் உதவியுடன் போர் செய்ய போகிறான். ஏமாங்கத நாட்டை கட்டியங்காரனிடம் இருந்து எப்படி கைப்பற்றுகிறான் என்பதையும், சீவகனின் திருமண வாழ்க்கை பற்றியும் விரிவாக கூறுவது இந்த நூலாகும்.

நூல் அமைப்பு – சீவக சிந்தாமணி:

 • 13 இலம்பகங்களை கொண்டது (நாமகள் இலம்பகம் முதல் இலம்பகம்) (முக்தி இலம்பகம் இரண்டாவது இலம்பகம்), 3145 பாடல்களை கொண்டுள்ளது. இந்த நூலின் பாவகை விருத்தம்.
 • இலம்பகங்களுக்கு பெரும்பாலும் பெண்கள் பெயரே சூட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு இலம்பகத்திலும் ஒரு திருமண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது.

நூல் சிறப்பு – Seevaga Sinthamani:

 • விருத்தப்பாக்களால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி.
 • இந்த நூலில் சீவகன் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றான், அதனால் இந்த நூலிற்கு மணநூல் என்ற சிறப்பு பெயர் உண்டு.
 • இந்த நூலில் காப்பிய தலைவனின் வீரம், அழகு, அறம் போன்ற அனைத்து கருத்துக்களும் தெளிவாக எடுத்து கூறப்படுகின்றன.
 • கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் போன்ற வடமொழியில் எழுதப்பட்ட நூல்களில் சீவகன் கதை கூறப்பட்டிருக்கும். வடமொழியில் இருந்த சீவகன் கதையை திருத்தக்க தேவர் தமிழில் தழுவி சீவக சிந்தாமணி எனும் பெருங்காப்பியத்தை தமிழுக்கு கொடுத்துள்ளார்.

சீவக சிந்தாமணியின் வேறு பெயர் என்ன?- சீவக சிந்தாமணி:

 • மணநூல்
 • முக்தி நூல்
 • காமநூல்
 • இயற்கை தவம்
 • முதல் விருத்தப்பா காப்பியம்
 • தமிழ் இலக்கிய நந்தாமணி
 • முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்

சீவக சிந்தாமணி tnpsc – சீவக சிந்தாமணி வினா விடை:

சீவக சிந்தாமணி வினா விடை
சீவகனின் பெற்றோர் சச்சந்தன் மற்றும் விசையை 
சீவக சிந்தாமணியில் எத்தனை இலம்பகங்கள் உள்ளன?13 இலம்பகங்கள் 
சீவக சிந்தாமணியின் முதல் நூல் கத்திய சிந்தாமணி,  சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம்
சீவக சிந்தாமணி ஆசிரியர்திருத்தக்க தேவர் 
சமயம் சமண சமயம் 
சிந்தாமணி பொருள்ஒளி கெடாத ஒரு வகை மணி
சீவக சிந்தாமணி பாடல்கள் எண்ணிக்கை3145
சீவகன் எத்தனை பெண்களை மணந்தான்8
சீவக சிந்தாமணியின் கதைத் தலைவன் யார்?சீவகன் 
சீவகனுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்அச்சணந்தி

 

சிலப்பதிகாரம் சிறப்புகள்
தொல்காப்பியம் சிறப்புகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil