தட்கல் டிக்கெட் என்றால் என்ன? | Tatkal Ticket Means in Tamil

Tatkal Ticket Means in Tamil

தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் | IRCTC Tatkal Booking Time in Tamil 

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் தட்கல் டிக்கெட் என்றால் என்ன என்பதை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம். முன்னெல்லாம் ரயிலில் பயணிப்பவர்கள் அந்த நேரத்திற்கு சென்று டிக்கெட் புக் செய்து பயணம் செய்வார்கள். ஆனால் இப்போதோ எல்லாம் இன்டர்நெட் மயமாகி விட்டதால் ரயில் டிக்கெட்டை மொபைல் மூலம் முன்பதிவு செய்துகொள்கிறார்கள். வாங்க நாம் இந்த பதிவில் தட்கல் டிக்கெட் என்றால் என்ன என்பதை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

2 நிமிடத்தில் மொபைல் மூலம் ஈஸியா ட்ரெயின் டிக்கெட் நீங்களே புக் செய்யலாம்..!

தட்கல் டிக்கெட் என்றால் என்ன?

ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் அவசர காலத்தில் பயணம் செய்ய விரும்பும் போது ஒரு நாளிற்கு முன் புக் செய்வதற்கான சேவை ஆகும்.

தட்கல் என்பதன் அர்த்தம்:

  • தட்கல் என்பது இந்தி மொழியை சார்ந்த வார்த்தையாகும்.
  • தட்கல் என்பதற்கு “அந்த இடத்தில்”, இப்போதே, உடனடி என்பது பொருளாகும்.

தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம்:

ரயிலில் தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்வதற்கு 2015-ம் ஆண்டு முதன் முறையாக ஏசி டிக்கெட்களை காலை 10:00 மணி முதல் புக் செய்யலாம் என்றும் ஏசி இல்லாத டிக்கெட்களை தட்கல் வழியாகக் காலை 11:00 மணி முதல் புக் செய்யலாம் என்றும் ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

எத்தனை டிக்கெட் தட்கல் முறையில் புக் செய்யலாம்?

ஒரே நேரத்தில் 4 தட்கல் வரை ரயில்வே கவுண்டரில் தட்கல் டிக்கெட் புக் செய்யலாம்.

இதுவே IRCTC தளத்தில் ஒரு கணக்கை பயன்படுத்தி 2 டிக்கெட்டுகள் மட்டுமே செய்ய முடியும்.

தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்யும் போது சாதாரண ரயில் டிக்கெட் புக்கிங் இல்லாமல் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.

ரயில் நேர அட்டவணை 2022

பிரீமியம் தட்கல் சேவை:

  • 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அறிமுகம் செய்யப்பட்ட பிரீமியம் தட்கல் டிக்கெட் சேவையில் புக் செய்தால் டிக்கெட்டின் விலை நேரம் குறைய குறைய உயர்ந்துகொண்டே போகும்.
  • இது புக் செய்யப்பட்ட டிக்கெட்களை வைத்தும் மாறுபடும்.

ஏதேனும் சலுகை உண்டா?

  • ரயில்வே வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய 10% வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
  • பிற வகுப்பு டிக்கெட்களுக்கு 30% அடிப்படை கட்டணத்தில் இருந்து கூடுதலாக செலுத்த வேண்டும்.
ரயில்வே பாஸ் அப்ளை பண்ணுவது எப்படி?

செலுத்திய கட்டணம் திரும்ப கிடைக்குமா?

தட்கல் சேவையை பயன்படுத்தி ரயில் டிக்கெட் புக் செய்து உறுதியான பயணச்சீட்டை நீக்க விரும்பினால் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

பயண வகுப்பு குறைந்தபட்ச தட்கல் கட்டணம் (Rs)அதிகபட்ச தட்கல் கட்டணம் (Rs)கட்டணம் செலுத்துவதற்கான குறைந்தபட்ச தூரம் (Km)
இரண்டாம் வகுப்பு (சிட்டிங்) 1015100
தூங்கும் இருக்கை 100200500
AC Chair Car 125225250
AC 3 Tier 300400500
AC 2 Tier 400500500
Executive 400500250

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil