தமிழுக்கு அமுதென்று பேர் | Tamilukkum Amudhendru Per Lyrics in Tamil

Tamilukkum Amudhendru Per Lyrics in Tamil

தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் | Tamilukkum Amudhendru Per Song Lyrics in Tamil

நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இந்த பதிவில் கவிஞர் பாரதிதாசன் எழுதிய “தமிழுக்கு அமுதென்று பேர்” அந்த பாடலின் முழு வரிகளை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். பாரதிதாசனை புரட்சிக்கவி என்றும் பாவேந்தர் என்றும் சிறப்பாக அழைத்து வந்தார்கள். இவரின் அற்புதமான படைப்புகளுக்கு சாஹித்ய அகாடமி விருது பெற்றவர். வாங்க இந்த பதிவில் தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் வரிகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடல் வரிகள்

தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் வரிகள்:

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com